காணாமற்போன மீனவர்களில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்!

Monday, December 18th, 2017

மன்னார் பேசாலையிலிருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணாமற்போயிருந்த இரு மீனவர்களில் ஒருவர், இராமேஸ்வரம் மீனவர்களினால் காப்பாற்றப்பட்டுள்ளார்.

காணாமற்போயுள்ள மற்றைய மீனவர் தொடர்பில் இதுவரை தகவல் கிடைக்கவில்லை என மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மன்னார் – பேசாலையிலிருந்து நேற்று (16) அதிகாலை கடற்றொழிலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் வீடு திரும்பாத நிலையில் உறவினர்களால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

4 பிள்ளைகளின் தந்தையான 37 வயதுடைய அந்தோனி மரியதாஸ் மற்றும் 25 வயதான சம்சன் அன்டன் ஆகியோரே இவ்வாறு காணாமற்போயிருந்தனர். இந்த மீனவர்கள் பயணித்த படகு கவிழ்ந்து தத்தளித்துக் கொண்டிருந்த நிலையில் அதிலிருந்த ஒருவர் இராமேஷ்வரம் மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளார்.

மீனவர்கள் காணாமற்போனமை தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும், சம்பவம் குறித்து கடற்படையினருக்கும் அறிவித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts:

கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமையின் உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தால் நாம் மீண்டும் உலகக் கிண்...
கரணவாய் பகுதியில் மினி சூறாவளி - 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிர...
விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்வனவு வேலைத்திட்டம் அவசியம் - பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் நாடாள...

உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் - பொதுத்தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணை...
கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளிற்கு எதிர்கட்சியினரும் ஆதரவுளிக்க வேண்டும் - அமைச்சர் நாம...
பயங்கரவாத தடைச்சட்டத்தில் மீளாய்வுகள் மேற்கொண்டு தனிச்சட்டமாக்க வேண்டும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமை...