எரிவாயு வெடிப்பு – இலங்கை காப்புறுதி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் பசில் ராஜபக்ச பணிப்பு!
Wednesday, January 5th, 2022
இலங்கையில் இடம்பெறும் எரிவாயு வெடிப்புச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு இலங்கை காப்புறுதி நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எரிவாயு நிறுவனங்கள் இலங்கை காப்புறுதி நிறுவனத்தில் காப்புறுதி செய்துள்ளன.
இந்நிலையில், அந்த நிறுவனங்களின் எரிவாயுவினால் ஏற்படும் விபத்துக்களுக்கு காப்புறுதி இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.
இது குறித்து காப்புறுதி நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பொதுநலவாய நாடுகளின் உள்ளூராட்சி மாநாடு இலங்கையில்!
மக்களுக்கான செயற்றிட்டங்களை தமது தனிப்பட்ட செயற்பாடாக யாரும் உரிமை கோர முடியாது - ஈ.பி.டி.பியின் யாழ...
தீ விபத்துக்குள்ளான கப்பல் - கடல் மாசுபாட்டை நிவர்த்தி செய்ய இலங்கைக்கு நோர்வே உதவி!
|
|
|


