எதிர்வரும் 08ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர்!
Monday, April 23rd, 2018
நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி பிற்பகல் 2.15க்கு ஆரம்பமாகும் என்றும் ஜனாதிபதி செயலக அதிகாரிகள் இது தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பிலான புதிய வர்த்தமானி ஜனாதிபதியினால் இன்று(23) வெளியிடப்படும் எனவும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கடந்த 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகும் தினம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்த போதிலும், அதில் திகதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
தவ்ஹித் ஜமாத் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களை கைது செய்ய இன்டர்போலின் உதவி!
தேர்தல்கள் ஆணையாளரிடம் முறையிட்டுள்ள புகையிரத ஊழியர்கள்!
தேர்தலை கண்காணிக்கவரும் வெளிநாட்டவர்களுக்கு இரண்டு வார கால தனிமைப்படுத்தல்
|
|
|


