உயர்தர பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்குத் தடை!

கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையின் பொருட்டு நேற்று நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரையில் உயர்தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்தலை விடுத்துள்ளது.
அத்துடன், பரீட்சையுடன் தொடர்புடைய ஏனைய வளப்பகிர்வு விடயங்களை மேற்கொள்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.குறித்த நபரோ, நிறுவனமோ இந்த தடைகளை மீறும் பட்சத்தில் அது தொடர்பில் முறையிடுமாறு காவல்துறையினருக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது
இவ்வாறான விடயங்கள் தொடர்பில் காவல்துறையின் அவசர தொலைபேசி இலக்கமான 119 மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் விரைவு தொலைபேசி இலக்கமான 1911 அல்ல என்ற தொலை பேசி இலக்கத்திற்கோ முறையிட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது
Related posts:
நல்லூர் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது!
வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வழங்கியமை பாராட்டத் தக்கது - தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்!
இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வருகையின்போது கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை - 2 புரிந்துணர...
|
|