உடற் பரிசோதனையின் பின்னரே தலைமைத்துவப் பயிற்சி – கல்வி அமைச்சர் !
Saturday, February 24th, 2018
அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியை ஒரு சில சம்பவங்களுக்காக நிறுத்த வேண்டியதில்லை. அம்பாந்தோட்டையில் அதிபர் ஒருவர் தலைமைத்துவப் பயிற்சியின் போது உயிரிழந்தமை தொடர்பில் துரித அறிக்கையொன்றை கோரியுள்ளேன். அதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. இனிமேல் உடற்பரிசோதனை செய்த பின்னரே தலைமைத்துவ பயிற்சியில் இணைத்து கொள்ளவுள்ளப்படுவர். இவ்வாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று வியாழக்கிழமை வாய் மூல விடைக்கான வினா நேரத்தின் போது டலஸ் அழகபெரும எம்.பி எழுப்பிய மேலதிக கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்தார்.
அதிபருக்கான தலைமைத்துவப் பயிற்சியில் ஈடுபட்ட அம்பாந்தோட்டை சுசி தேசிய பாடசாலையொன்றின் அதிபர் உயிரிழந்துள்ளார். அதிபர்களின் வயதைப் பொறுத்தவரையில் இவ்வாறான இது தொடர்பான உண்மையான காரணம் என்ன? என்று டலஸ் அழகபெரும கேள்வி எழுப்பினார்.
அதற்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் பதிலளித்தார்.
அதிபர் கட்டாயம் தலைமைத்துவப் பயிற்சியில் இணைந்து கொள்ள வேண்டும் என்பதில்லை. இந்தப் பயிற்சிக்கான ஏற்பாடுகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம். இதன்போது தனியார் நிறுவனங்களில் ஏதாவது தவறுகள் நடந்திருந்தால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
Related posts:
|
|
|


