இலங்கை ஐக்கிய அரபு இராச்சியம் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை!
Thursday, October 5th, 2017
ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில்வாய்ப்பிற்காக செல்லும் வீட்டு பணிப்பெண்கள் குறித்து தகவல்களை பரிமாறிக்கொள்வதற்கும் தெளிவான மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக இத்தொழிற்துறையில் சேர்த்துக்கொள்வதற்குமாக அந்நாட்டு அரசாங்கத்தினால் புதிய சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டவிதிகளுக்கு அமைவாக இலங்கை பணியாளர்களை அங்கு அனுப்புவதற்கும் மனிதவள சந்தை மற்றும் முறைகேடுகளிலிருந்து இலங்கை பணியாளர்களை பாதுகாக்கும் வகையில் இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்குமிடையில் மனிதவள தொழிற்துறை புரிந்துணர்வு விடயத்தில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று செய்துகொள்ளப்படவுள்ளது. இதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
Related posts:
வித்தியா கொலை: உடந்தையாக இருந்த பொலிஸ் அதிகாரி மீண்டும் மாட்டினார்!
கொரோனா வைரஸ் தொற்று நோயாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு - உலக சுகாதார அமைப்பு!
மாகாண சபை தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானம் – கூடுகின்றது அமைச்சரவை !
|
|
|


