இலங்கைக்கு பின்னடைவு!

Wednesday, June 21st, 2017

சர்வதேச ஸ்கை ட்ரெக்ஸ் விமான சேவை மதிப்பீட்டில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு 81வது இடம் கிடைத்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் ஸ்கை ட்ரெக்ஸ் சர்வதேச விமான நிறுவனத்தின் மதிப்பீட்டு வேலைத்திட்டம் பரிஸ் விமான கண்காட்சிக்கு இணையாக பிரான்ஸில் இடம்பெறும்.விருது வழங்கும் நிகழ்வில் சமகாலத்தில் விசேட அவதானத்தை வென்றுள்ள கட்டார் எயார்வேஸ் விமான சேவை முதல் இடத்தை பெற்றுள்ளது.

சிங்கப்பூர் விமான சேவை மற்றும் ஜப்பான் All Nippon விமான சேவை முறையான இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது.கடந்த முறை மதிப்பீட்டில் 67வது இடத்தில் இருந்த ஸ்ரீலங்கன் விமான சேவை 14 இடங்கள் கீழ் இறங்கியுள்ள நிலையில் அது இலங்கைக்கு ஏற்பட்ட பாரிய பின்னடைவாகும். இது விரைவான வீழ்ச்சி என விமான போக்குவரத்து ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts:


சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பது குறித்து ஆராய்வு - அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் ப...
முச்சக்கரவண்டி சேவையை முறையான ஒழுங்குமுறைக்கு உட்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அதன் ...
டெங்கு நோய் பரவல் 30 வீதத்தால் அதிகரிப்பு - தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு கடும் எச்சரிக்கை!