இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் பொருத்தமற்றது – அமைச்சர் டிலான் பெரேரா!
Monday, May 1st, 2017
இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் பெருத்தமற்றது என்பதை ஜனாதிபதி புரிந்துக் கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இராணுவ அதிகாரிகளுக்கு அரசியல் பொருத்தமற்றது என்பதற்கான உதாரணங்கள் நாட்டின் வரலாற்றில் உள்ளது.அரசியல் நிர்வாகமும் இராணுவ நிர்வாகம் என்பது வெவ்வேறானவை. இதன் காரணமாகவே இராணுவத்தில் இருந்து வந்து தேர்தலில் போட்டியிட்டதால் சரத் பொன்சேகாவை மக்கள் தோற்கடித்தனர்.
இராணுவத்தில் இருக்கும் போது அவர்கள் திறமைசாலிகள். அது சரத் பொன்சேகாவுக்கும் பொதுவானது. கோத்தபாய ராஜபக்சவும் பொதுவானது. ஏனையோருக்கும் அப்படியே. எனினும் இவர்கள் அரசியலுக்கு வந்ததும் முற்றாக தோற்று போய் விடுகின்றனர் என
பதுளை ஹாலி-எல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் இவ்வாறு டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
Related posts:
நாடு திரும்புவதில் அதிருப்தி வெளியிட்டுள்ள மியன்மார் நாட்டைச் சேர்ந்த முஸ்ஸிம்கள்!
கைவிரல் அடையாள நடைமுறையை எதிர்த்து வவுனியாவில் வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்!
மோட்டார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு - பொலிஸ் மா அதிபர்...
|
|
|


