அர்பணிப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் விசேட பாராட்டு!

Thursday, December 28th, 2017

கழிவுப்பொருள் நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான பொறுப்பை உரிய வகையில் நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்பு செய்த அனைத்து அரச அதிகாரிகளும் பாராட்டப்படுவார்கள் என்று மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மேலும் இத்திட்டத்திற்கு உதவிய பாதுகாப்பு பிரிவை சேர்ந்த அதிகாரிகளும் பாராட்டப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

விசேடமாக கொழும்பு நகரில் கழிவு பொருள் பிரச்சனையை தீர்க்க பங்களிப்பு செய்தவர்களை பாராட்டி வோட்டர்எச் ஹோட்டலில் நடைபெற்ற கொழும்பு நகர அலங்கார விருது வைபவம் 2017 என்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

நிகழ்வில் அமைச்சர் தொடந்து உரையாற்றுகையில் , இதற்கு பங்களிப்பு செய்த உயர் அதிகாரிகள் முதல் தொழிலாளிகள் வரையிலான அனைவருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் ஊடகத்துறை பிரதி அமைச்சர் லசந்த அலகியவண்ண, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, கொழும்பு நகர ஆணையாளர் பி.கே.அனுர உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்

Related posts: