அமைச்சர் விஜயகலாவே என்னைக் காப்பாற்றினார் – கொலையாளி சுவிஸ் குமார் சாட்சியம்!
Tuesday, August 29th, 2017
வேலணை பகுதியில் என்னை வழி மறித்த பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தார்கள்.’அப்போது அங்கு வந்த விஜயகலா மேடம், நீங்கள் சசியின் அண்ணாவா என்று என்னிடம் கேட்டார். நான் ஆம் என்று சொன்னவுடன், இவர் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் கூறி என்னைக் காப்பாற்றினார் என, வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் சாட்சியம் அளித்துள்ளார்
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதிகள் மூவரடங்கிய குழாம் முன்னிலையில் சுவிஸ் குமார், வாக்குமூலம் அளித்துள்ளார்.
மின்கம்பத்தில் கட்டிவைத்து பொதுமக்கள் என்னைத் தாக்கியபோது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தான் என்னை காப்பாற்றினார்’ என, வித்தியா படுகொலை வழக்கில் பிரதான சந்தேகநபரான சுவிஸ்குமார் சாட்சியம் அளித்துள்ளார்.
மாணவி வித்யா படுகொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணைகள் முதன்மை மன்று அடிப்படையில் இடம்பெற்று வருகின்றன. இதில் முறைப்பாட்டாளர்கள் மற்றும் அரச தரப்பு சாட்சிகள் வழங்குவத்கு இடமளிக்கப்பட்டதுடன், பிரதிவாதி தரப்பினருக்கும் சாட்சியமளிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கில் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமார், இன்று சாட்சியம் அளித்தார்.அவர் சாட்சியம் அளிக்கையில், ‘எனது தம்பி ஊர்காவற்றுறை காவல்துறையினரால் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டதுடன், யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லப்பட்டார்.’அவரை பார்ப்பதற்காக நான் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்ட போது, வேலணை பகுதியில் என்னை வழி மறித்த பொதுமக்கள் மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்தார்கள்.’அப்போது அங்கு வந்த விஜயகலா மேடம், நீங்கள் சசியின் அண்ணாவா என்று என்னிடம் கேட்டார். நான் ஆம் என்று சொன்னவுடன், இவர் மீது தாக்குதல் மேற்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களிடம் கூறினார்.
அவ்வாறு சொல்லிய விஜயகலா, 2 மணித்தியாலங்கள் அங்கேயே இருந்தார். எனது மனைவியும் எனது அம்மாவும் அந்த இடத்துக்கு வந்து என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்’ என்றார் என தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


