மக்களின் நலன்களே எமது நோக்கம் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் வி.கே.ஜெகன்!

Thursday, August 31st, 2017

முழுமையாக மக்கள் மயப்படுத்தப்பட்டுள்ள ஈழ மக்கள் ஜனநாயக கட்சியானது அதன் எதிர்கால செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்வதற்காக ஒவ்வொரு பிரதேசங்களிலும் வட்டார ரீதியான கட்டமைப்பை உருவாக்கி அதில் பெரு வெற்றி கண்டுள்ளது என்பதுடன் மக்களுக்கும் கட்சிக்கும் இடையில் மேலும் நெரக்கமான ஒரு உறவுப்பாலத்தையும் உருவாக்கியுள்ளது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இன்றையதினம் நடைபெற்ற வட்டார செயலாளர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்

இன்று கட்டப்பட்டுள்ள இந்த வட்டார அமைப்பானது கட்சியின் எதிர்கால செயற்பாடுகளை மக்களிடம் எடுத்துச் செல்லும் பலமிக்க ஊடகமாக இருப்பதுடன் செயலாளர் நாயகத்தின் எண்ணக்கருவில் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த கட்டமைப்பு தமிழ் மக்களின் அனைத்து நலன்களையும் முன்னிறுத்தி எதிர்கால தேவைகளை வென்றெடுப்பதற்கான கட்டமைப்பாகவும் அமைந்துள்ளது.

இந்நிலையில் இன்று ஒன்றுகூடியுள்ள எமது வட்டார நிர்வாக செயலாளர்கள் மக்களுக்கு கட்சியின் செயற்றிட்டங்களையும் அது முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தையும்  முழுமையாக  மக்களிடம் எடுத்துச் சென்று மேலும் அதிகரித்த பலத்தை பெற்றுக்கொள்வதனூடாக தமிழ் மக்களது எதிர்கால அரசியல் மற்றும் அபிவிருத்தி சார்ந்த தேவைகளை வெற்றிகொள்ளும் திறனை உருவாக்கிக் அதன் அடைவுமட்டத்தை எட்டமுடியும் என்றும் தெரிவித்தார்

Related posts:

தமிழ் மக்கள் மத்தியில் நிகழும் அரசியல் மாற்றமே தமிழ் மக்களது அரசியல் தலைவிதியை மாற்றியெழுதும் - ஈ.பி...
விபத்தில் பலியான மாணவி கேஷனாவின் பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை!
மக்கள் சேவை செய்வது தொடர்பில் ஈ.பி.டி.பிக்கு யாரும் கற்றுத்தர தேவையில்லை – மாநகரசபையில் தர்சானந்தை வ...

புங்குடுதீவில் ஆயுர்வேத வைத்தியசாலை திறந்துவைப்பு - ஆயுர்வேத மருத்துவத்தை எதிர்பார்ப்பவர்களின் அபிலா...
புலிகளின் தலைமைக்கு பிழையான வழிகாட்டலை கொடுத்தாரா பாலசிங்கம் – சந்தேகத்தை ஏற்படுத்துகிறார் சிறீதரன் ...
திரைப்பட நடிகை குஸ்பு மட்டும் புலிகளை பயங்கரவாதிகள் என கூறவில்லை – கூட்டமைப்பின் பலரம் அவ்வாறே கூறிவ...