தோழர் மூர்த்தியின் புகழுடல் தீயுடன் சங்கமம்!
Sunday, August 27th, 2017
காலஞ்சென்ற அமரர் வேலுப்பிள்ளை நடுநாயகமூர்த்தியின் (தோழர் மூர்த்தி) புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரின் இறுதிக் கிரியைகளிலும் பங்கெடுத்தார்.
முன்பதாக சுழிபுரத்தில் அமைந்துள்ள தோழர் மூர்த்தியின் இல்லத்திற்கு சென்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா புகழுடலுக்கு மலர்மாலை அணிவித்து இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தினார்.
சமயக் கிரியைகளைத் தொர்ந்து அன்னாரது பூதவுடல் ஊர்தி பவனியாக பொன்னாலை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு இடம்பெற்ற சமயக் கிரியைகளைத் தொடர்ந்து தோழர் மூர்த்தியின் புகழுடல் தீயுடன் சங்கமமாகியது.
இந்நிகழ்வுகளில் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவேண்டும் – அம்பலம் இரவீந்திரதாசன்!
யாழ்.மாநகரை அண்டிக் காணப்படும் கழிவு நீரகற்றும் வாய்க்கால்களை துரிதகதியில் தூர்வார வேண்டும் - ஈ.பி.ட...
ஜனாதிபதித் தேர்தலில் 13வது திருத்தமே எமது இலக்கு - EPDPயின் ஊடகச் செயலாளர் ஸ்ராலின்!
|
|
|






