ஐயப்பன் சுவாமி வீதி உலா தடுக்கப்பட்டமை தொடர்பான செய்தி உண்மைக்கு புறம்பானது – ஊடக சந்திப்பில் தோழர் ஜெகன்!

Thursday, December 28th, 2017

கோண்டாவில் ஐயப்பன் கோயில் வருடாந்த திருவிழாவின் விஷேட அம்சமாக யானைமீது சுவாமி வீதிவலம் வருவதை உறுதிசெய்வது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செய்தி பரப்பப்ட்டுள்ளதை தாம் கண்டிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா வேலும்மயிலும் குகேந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இது குறித்து இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் –

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைலைமை செயலகத்திற்கு நேற்றையதினம் வருகைதந்திருந்த ஐயப்பசாமியின் ஆச்சாரிகள் மற்றும் பக்தர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக யானைமீது சுவாமி வீதி உலா வருவதற்கான அனுமதியினை  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தேர்தல் செயலகத்துடன் கலந்துரையாடி பெற்றுக்கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது உள்ளூராட்சி சபை தேர்தல் காலம் என்பதாலும் யானை ஒரு கட்சியின் தேர்தல் சின்னமாகவும் இருப்பதால் இது தேர்தல் விதிமுறைக்கு முரணானது என கட்சி முறைப்பாடு பொலிஸ் நிலையம் ஒன்றில் செய்துள்ளதாக குறித்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த செய்தி எமது தலைமையினதும் கட்சியினதும் நற்பெயருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் இது ஒரு திட்டமிட்ட சதியாகவே தாம் கருதுவதாகவும் இதன் உள்நோக்கம் என்ன என்பது தொடர்பில் ஆராயப்படவேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோருடனும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: