ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று கிளிநொச்சி வேட்பு மனுதாக்கல்!
 Thursday, December 21st, 2017
        
                    Thursday, December 21st, 2017
            ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று கிளிநொச்சி வேட்பு மனுதாக்கல் செய்துள்ளது இன்று காலை 9 மணியளவில் மாவட்ட அமைப்பாளரும் மாகாணசபை உறுப்பினரும் ஆன வை தவநாதன் தலைமையில் சென்று வேட்பாளர்கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்
இதன் பின்னர் கருத்து தெரிவித்த மாவட்ட அமைப்பாளர் வை தவநாதன் கடந்த ஏழு வருடங்கள் ஆக கிளிநொச்சி மக்களுக்கு பல அபிவிருத்தி வேலைத்த்ட்டங்களை முன்னெடுத்தது மட்டுமல்லாது பல இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளையும் இந்த கட்சி வழங்குவதில் முன் நின்று உழைத்து இருக்கிறது எனவே கிளிநொச்சி மக்களின் மனங்களில் இவ் கட்சி இடம் பிடித்து இருக்கிறது என்று தெரிவித்த வை தவநாதன் அவர்கள் இந்த முறையும் இந்த உள்ளுராட்சி தேர்தலில் தமது கட்சி வேட்புமனுக்களை தாக்கல் செய்து இருப்பதாகவும் ஜனநாயக அடிப்படையில் சட்டங்களுக்கு உபட்டு தமது கட்சி தேர்ர்தலில் போட்டியிட இருப்பதாகவும் தெரிவித்தார் .

Related posts:
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        