யுத்த வடுக்களற்ற புதிய தேசத்தை உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Sunday, March 6th, 2016

11.02.2016 அன்று நாடாளுமன்றத்தில் தனி நபர் பிரேரணை ஒன்றை முன்வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா உரையாற்றிய உரையின் முழுவடிவம்

12.02.2016 வெள்ளிக்கிழமை

கௌரவ சபாநாயகர் அவர்களே!…..

கடந்த கால அழிவு யுத்தத்தின் வடுக்களில் இருந்து மேலும் மீண்டெழு விரும்பும் தமிழ் பேசும் மக்களின் சார்பாகவும்,…

சகல தரப்பாலும் மேலும் கட்டியெழுப்பப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டிய தேசிய நல்லிணக்கம் குறித்த எமது விருப்பத்தின் பேரிலும்,…

எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் சமவுரிமை என்பது அர்த்தமுள்ளதாக மலர வேண்டும் என்ற உயரிய நோக்கிலும்,…

இந்த நாடாளுமன்ற சபையில் நான் தனிநபர் பிரேரணை ஒன்றை

சமர்ப்பிக்க  விரும்புகின்றேன்.

வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஏனைய இடங்களிலும் யுத்த அழிவுகளை அகற்றி, அவற்றிற்குப் பதிலான மறுசீரமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான பிரேரணையினையே நான் இங்கு சமர்ப்பிக்றேன்.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைகளின் காரணமாகவும் பாதுகாப்புப் படையினருக்கும் விடுதலைப் புலியினருக்கும் இடையில் நடைபெற்ற போர் நடவடிக்கைகளின் காரணமாகவும் குறிப்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களிலும், பொதுவாக நாட்டின் எல்லாப் பாகங்களிலும் அழிவடைந்த நிலையில் காணப்படும் கட்டடங்களையும், நீர்த்தாங்கிகளையும், ரயில், பஸ், விமானம் போன்ற போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்டவைகளையும், யுத்தத்தில் சேதமடைந்த இராணுவ வாகனங்களையும், காட்சிப் பொருட்களாகவும், பாதுகாக்கப்பட்ட இடங்களாகவும் பொதுமக்கள் பார்வைக்காக அரச செலவில் தொடர்ந்தும் வைத்துப் பாதுகாக்கும் நடைமுறையின் காரணமாக இனங்களுக்கிடையிலான நல்லுறவை கட்டியெழுப்புவதில் பாதிப்பு ஏற்படுவதுடன், வளரும் இளைய தலைமுறையினரிடமும், எதிர்கால சந்ததியினரிடமும் நாட்டில் நடைபெற்ற யுத்த முஸ்தீபுகள் தொடர்பான நினைவு தொடரப்படுவதை முடிவுறுத்தும் நோக்கமாகவும் இத்தகைய அழிவடைந்த இடங்களையும், ஏனையவற்றையும் மீளவும் மறுசீரமைப்புச் செய்து பொதுமக்கள் நலனுக்காக அவற்றைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இப்பாராளுமன்றம் பிரேரிக்கின்றது.

கௌரவ நபாநாயகர் அவர்களே!…

நான் என்றும் மக்களுடன் நீடித்த உறவுகளை கொண்டிருப்பவன். இடையறாத உரையாடல்களை எமது மக்களோடு தினமும் நடத்தி வருபவன்.மக்களின் கருத்துக்களை சரிவரப்புரிந்து கொள்ளாத எந்தவொரு அரசியல் செயற்பாடுகளும் மக்களுக்கு விமேசனங்களை தரப்போவதில்லை என்ற எமது கொள்கை நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருப்பவன்.

ஆகவே,.. எமது மக்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட மக்களின் ஆழ் மன உணர்வுகளையே இந்த சபையில் தனிநபர் பிரேரணையாக நான் சமர்ப்பித்திருக்கிறேன்.

இதை இந்த நாடாளுமன்ற சபையில் இருக்கும் அனைத்து தரப்பினரும் புரிந்து கொண்டிருப்பார்கள் என நான் நம்புகின்றேன்.

எமது அரசியல் வரலாற்றில் நடந்தவைகள் நடந்தவைகளாகவும், இனி நடக்கப்போகின்றவைகள் நடந்தவைகளுக்கு பரிகாரம் தேடும் ஒளி மயமான எதிர்காலத்தை நோக்கியதாகவும் இருக்க வேண்டும் என்பதையே நாம் விரும்புகின்றோம்.

ஆக்கத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு நடத்தப்பட வேண்டிய எமது மக்களுக்கான உரிமைப்போராட்டம் அழிவுகளை மட்டுமே அறுவடையாக்கி கொண்டது நடந்து முடிந்த வரலாற்றுத்துயராகும்.

வளர்ந்து வரும் எமது வருங்கால சந்ததிக்கும், இனி வளரப்போகும் அடுத்த தலைமுறைக்கும் நாம் எடுத்துக்காட்டவேண்டியது அழிவு யுத்தத்தின் அடையாள சின்னங்களை அல்ல.

மாறாக நாம் அழிவுகளில் இருந்தும், யுத்த வடுக்களில் இருந்தும் மீண்டிடழுந்து வந்திருக்கின்றோம் என்பதை அடையாளப்படுத்தும் புதியதொரு பூமியையே நாம் எதிர்கால சந்ததிக்கு காட்ட விரும்புகின்றோம்.

இந்த மண்ணில் ஒரு உரிமைப்போராட்டம் நடந்ததற்கான பதிவுகள் கடந்த கால வரலாறுகளாக மட்டும் இருக்கட்டும்.தென்னிலங்கையில் நடந்து முடிந்த கிளர்ச்சிகளும், போராட்டங்களும் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட போதிலும்,..அவைகள் குறித்த அழிவுகளின் சின்னங்களோ, அன்றி அடையாளங்களோ

எதிர்கால சந்ததியின் பார்வைக்காக எங்கும் காட்சிப்பொருட்களாக வைக்கப் பட்டிருக்கவில்லை.  இதை நாம் விரும்பி வரவேற்கின்றோம்.

தென்னிலைங்கையிலும் ஒரு கிளர்ச்சியோ அன்றி போராட்டமோ நடந்ததற்கான வரலாற்று பதிவுகள் மட்டுமே காணப்படுகின்றன. அதுபோலவே வடக்கு கிழக்கிலும் நடந்து முடிந்த உரிமை போராட்டங்களின் அடையாளங்களோ, அதன் அழிவுச்சின்னங்களோ எந்தவோரு மக்களினதும்பார்வைக்காக காட்சி பொருட்களாக வைக்க கூடாது என்பதையே நாம் விரும்புகின்றோம்.வடக்கு கிழக்கிலும் ஒரு உரிமை போராட்டம் நடந்தது என்ற வரலாறு மட்டும் இருப்பதையே எமது மக்கள் விரும்புகிறார்கள்.

ஆனாலும் அந்த வரலாற்றோடு இணைந்து நாம் உரிமை பெற்று நிமிர்ந்திருக்கின்றோம் என்ற புதிய வாரலாறு ஒன்றும் இங்கு படைக்கப்பட வேண்டும்.

அதை நிறைவேற்றுவதற்காகவே இந்த அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கக்கும் முயற்சிகளில் இறங்கியிருக்கிறது. இதை ஈழ மக்கள் ஐனநாயக கட்சியாகிய நாம் மனப்பூர்வமாக வரவேற்கின்றோம்.

இதே வேளை அழிவு யுத்தத்தை வெற்றி கண்ட வரலாறு என்பது இலங்கை தீவில் வாழும் இன்னொரு தேசிய இனமான தமிழ் பேசும் மக்களை தோற்கடித்த வரலாறாக ஒரு போதும் இருந்து விடக்கூடாது.

தோற்றுப்போனது அழிவு யுத்தமே அன்றி தமிழ் பேசும் மக்கள் அல்ல. இந்த உண்மையை வெளிப்படுத்தும் வகையிலேயே அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஒரு; எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.தமிழ் மன்னானாகிய எல்லாளனை வெற்றி கண்ட துட்ட கைமுனு எல்லாள மன்னனுக்கு மரியாதை வழங்கி கௌரவித்திருந்த வரலாற்றை சகலரும் அறிந்திருப்பார்கள்.

அது போலவே அழிவு யுத்தத்தில் இருந்து மீட்டெடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களுக்கும் உரிய கௌரவவும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என்பதை இந்த சபையின் ஊடாக நான் வலியுறுத்த விரும்புகின்றேன். நாம் அரசியல் தீர்விற்காக மட்டுமன்றி யுத்தத்தில் சிதைந்து போன எமது தேசத்தை மறுபடியும் தூக்கி நிறுத்தவும் உழைத்து வந்திருக்கின்றோம்.

நாம் அரசியல் உரிமைக்காக மட்டுமன்றி எரிந்து போன எமது தேசத்தில் நலிந்து போன எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை பெறுவதற்காகவுமே அன்றாடம் உழைத்து வந்திருக்கின்றோம்.ஆனாலும், எமது தேசத்தை அழிவுகளில் இருந்து தூக்கி நிறுத்தும் எமது அபிவிருத்தி பணிகளையும்,

எமது மக்களுக்கான வாழ்வாதார உரிமைகளுக்கான தீர்வு நடவடிக்கைகளையும் வெறும் சலுகைகள் என்றும், அரசு போடும் எலும்பு துண்டங்கள் என்றும் எம்மை சிலர் எள்ளி நகையாடினார்கள்.

இந்நிலையிலும், எந்த தூற்றல்களுக்கும் அஞ்சாத எமது இடையாற உழைப்பின் காரணமாக எம்மை எள்ளி நகையாடியவர்களையே எமது வழிமுறைக்கு நாம் இன்று கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றோம்.

அன்று எரித்தழிக்கப்பட்ட தெற்காசியாவின் சிறந்த நூலகம் என்று போற்றப்படும் யாழ் நூலகத்தை நாம் முன்னாள் ஐனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க ஆட்சி காலத்தில் புனரமைத்து மீள கட்டியமைத்த போது,..

அதை தடுத்து நிறுத்தி அது தொடர்ந்தும் அழிவின் சின்னமாகவே இருக்க வேண்டும் என வெளிப்படையாகவே எதிர்த்து கங்கணம் கட்டி நின்றார்கள்.

ஆனாலும், அது அழிவின் சின்னமல்ல, எமது மக்களுக்கான அறிவின் சின்னம் என்று நாம் யாழ் நூலகத்தை மீளக்கட்டியமைத்து எமது மக்களுக்கு வழங்கியிருந்தோம்.

இதனால் யாழ் நூலகம் எரித்தழிக்கப்பட்டது என்ற வடுக்களில் இருந்து நாம் மீண்டெழுந்து வந்திருக்கின்றோம்.

இதை ஒரு உதாரணத்திற்கு மட்டுமே நான் இங்கு கூறி வைக்க விரும்புகின்றேன். இது போல் எத்தனையோ அழிவின் சின்னங்களை அறிவின் சின்னங்களாகவும், ஆக்கத்தின் சின்னங்களாகவும் நாம் மாற்றியமைத்திருக்கின்றோம்.

இவைகளுக்காக ஒரு அரசியல் பொறிமுறையினையே கையாண்டிருக்கின்றோம். மாறாக அர்த்தமற்ற எதிர்ப்பு அரசியல் நடத்தி, போர்க்கொடி ஏந்தி இவைகளை நாம் சாதித்தவர்கள் அல்ல.எமது வழிமுறைக்கு வந்தவர்கள் நாம் கையாண்ட பொறிமுறையினையும் ஏற்று வந்திருப்பார்கள் என்றே நாம் நம்புகின்றோம்.

 

இன்று எமது யதார்த்த வழிமுறையை ஏற்று வந்திருக்கும் சக தமிழ் கட்சி தலைமைகளின் வருகையை நாம் வரவேற்கின்றோம்.

இந்த சூழைல பயன்படுத்தி நாம் அனைவரும் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக செயலாற்ற வேண்டும்.

அரசியல் உரிமைகள் அற்று வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வை வழங்குவதற்காக இந்த அரசாங்கம் எவ்வாறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றதோ,..

அவ்வாறே,… யுத்த வடுக்களில் சிதைவடைந்து போன அழிவின் சின்னங்களை ஆக்கத்தின் சின்னங்களாகவும் மாற்றியமைக்க அரசாங்கம் முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்றே நான் எதிர்பார்க்கின

Related posts:

‘இரண்டாவது பண்டாரநாயக்க’அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க! டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் தெர...
நிராகரிக்கப்படும் தேயிலையை கழிவுத் தேயிலை ஆக்காதீர்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!
ஆகுதியானவர்களை நெஞ்சில் நினைவேந்தி சமத்துவ தேசத்தை உருவாக்குவோம் – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் அறைக...