செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 21.03.2003 அன்று நாடாளுமன்றில் ஆற்றிய உரையின் முழுவடிவம்

Friday, March 21st, 2003

கௌரவ தலைமை தாங்கும் உறுப்பினர் அவர்களே

பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் இரண்டாவது தடவையாகப் பதவிப் பொறுப்பேற்ற பின்னர் சமர்ப்பித்துள்ள முதலாவது வரவு செலவுத் திட்டம் பற்றி குழு நிலையில் விவாதிப்பதற்காக இங்கே கூடியிருக்கின்றோம். விலைவாசி உயர்ந்துள்ளதால் வாழ்க்கைச் செலவு கள் அதிகரித்து இருக்கின்றதாக குறிப்பிடும் நிலையில் யுத்தம் தொடர் வதற்கு ஏதுவான வரவு செலவுத்திட்டமே இது என்று சிலர் குற்றம் சுமத்துகின்றனர். பாதுகாப்புத் துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாகக் குறை கூறுகின்றனர். இத்தகைய கருத்துகளுக்கச் செவி சாய்க்கக் கூடிய சிலருக்காகச் சில வார்த்தைகளைக் கூறி எனது உரையை ஆரம்பிக்க விரும்புகின்றேன்.

“போர்!”  – இந்தச் சொல் இன்று இந்நாட்டு மக்கள் அனைவரதும் நாளாந்த வாழ்க்கையில் ஏதோவொரு வகையில் பாதிப்புக்களை ஏற் படுத்துவதாகவுள்ளது. இதனை எவரும் மறுதலித்துவிட முடியாது. போரை நடத்துவது என்பதும் அதன் மூலமாக அழிவுகளை ஏற்படுத்துவது என்பதும் எவருக்கும் விருப்பத்திற்கு உரியதாக இருக்காது. இந்தப்போரின் விளைவாக உயிர் உடமை இழப்புக்கள் மட்டுமன்றி குடும்ப உறுப்பினர்களிடையே பிரிவு அகதி முகாம் வாழ்க்கை இடப்பெயர்வுகள் கலாசார சீரழிவு நிம்மதி இழந்துபோன வாழ்வு எனப் பல்வேறு விதத்தில் நாடு அல்லலுற்று நிற்கின்றது. போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுதாகப் பிரகடனம் செய்யப்பட்ட கடந்த காலங்களில் எல்லாம் மீண்டுமொரு போருக்கான தயாரிப்புக்களோ நடைமுறையில் மேற்கொள்ளப்பட்டன. அரசாங்கப் படையினர் மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டிருப்பதாகக் கூறிக்கொண்ட காலப் பகுதியிலேயே தமிழர் தரப்பின் மாற்று அரசியல் சக்திகள் கருவறுக்கப் பட்டிருக்கின்றன. எனவேதான் படையினர் பாதுகாப்புத்துறையில் விழிப்புடன் இருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. அது யதார்த்தமானதேயாகும்.

பாதுகாப்புப் படையினர் நடவடிக்கைகளைத் தொடர்வதை ஆக்கிரமிப்பு நோக்கத்தின் பாற்பட்டது என்று ஒரு சாரர் கருத்து வெளியிடுகின்றனர். ஆனால் தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகள் கிடைக்கச் செய்வதற்கான பொறுப்பை நிலை நாட்டுவது தமிழ் பேசும் மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைகளைப் பேணுவது நாட்டு மக்கள் அனைவரதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது போன்ற பாரிய கடமைகளைப் பாதுகாப்பு படையினர் பொறுப்பெற்றுள்ளனர். அவற்றைப் பூர்த்தி செய்யும் மார்க்கத்தில் உயிரிழப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளனர். தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளாக வடக்கு – கிழக்கு மாகாணத்திலிருந்து இச் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைவரும் தத்தம் பாதுகாப்புப் படையினரின் தயவிலேயே தங்கியிருக்க வேண்டியுள்ளனர். படையினரின் பிரசன்னம் இல்லாத பகுதிகளுக்குச்  செல்வதற்கோ அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்கள் மத்தியில் வாழ்ந்து  அவர்களின் நாளாந்த வாழ்வுக்கு உதவுவதற்கோ இயலாத நிலைமையே நீடிக்கிறது. மேலும் இத்தகையோர் படையினரின் பாதுகாப்பு வலயங்களுக்குள்ளேயே வாழ வேண்டிய நிலைமை இப்போதும் நீடித்துக் கொண்டிருப்பது இரகசியமானது அல்ல. எனவேதான், சமாதானப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகலாம். யுத்த நிறுத்தம் நீடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. என்பன போன்ற செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் போதும் பாதுகாப்பு விழிப்பு நிலை பேணப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. எனவே, பாதுகாப்புத் துறைக்கான செலவினங்கள் தேவையற்றவையென்றோ, அவசியமற்றவையென்றோ கருதுவது பொருத்தமுடையதல்ல. மேலும் நாட்டின் பாதுகாப்பு அமைப்புக்கள் தாம் முகம் கொடுக்க வேண்டிய சவால்களைச் சமாளிகக் கூடிய வலுவும் திறனும் பெற்றிருக்க வேண்டும். ஆதலால் போருக்கு முடிவு கட்டுவதன் மூலமாகவே பாதுகாப்பு செலவினத்தைக் குறைக்க முடியும். மாறாக பாதுகாப்புச் செலவினத்தைக் குறைபபதன் மூலமாகப் போரை முடிவுக்குக் கொண்டு வரமுடியாது என்பதே உண்மையாகும். எனவே அடுத்த வருடத்தில் அபிவிருத்திப் பணிகளுக்கு உயர் முன்னுரிமை கொடுக்கும் ஆரோக்கியமான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சு சமர்ப்பிப்பதற்கு தேவையான ஒத்துழைப்பை இச்சபைக்குத் தெரிவாகியுள்ள கௌரவ உறுப்பினர்கள் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நாங்கள் சாதாரண மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கவும் இடையறாது பாடுபட்டு வருகின்றோம். இவ்வகையில் அபிவிருத்திப் பணிகளில் ஈடுபடுவதற்கான தொண்டர்களைப் பயிற்றுவிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளும் தகவல் தொழில்நுட்பத்துறையை மேம்படுத்தம் நோக்குடன் யாழ்ப்பாணத்தில் தகவல் தொழில்நுட்பப்பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளமையும் யாழ் குடாநாட்டில் 24 மணிநேர மின்சார சக்தியை பெற மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சியும் இங்கு குறிப்பிடத் தகுந்தவையாகும். மேலும் வடபகுதிக்கு பொருட்களை எடுத்துச் செல்வதற்கான கப்பல் கட்டணத்தைக் குறைக்கவும் வட பகுதியிலுள்ள தொழிற்சாலைகளை மீள இயங்க வைக்கவும் வட பகுதியின் உற்பத்திப் பொருட்களுக்குப் பொருத்தமான சந்தை வாய்ப்புக்களை விரிவாக்கி உற்பத்தியைப் பெருக்கவும் நவீன வசதிகளுடனான மாதிரிக் கிராமங்களை அமைக்கவும்கோரினால் நலிவுற்ற மாணவர்களுக்குப் போஷாக்குணவு வழங்கவும் நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

போர்ச் சூழலின் விளைவாகப் பல்லாண்டு காலமாக முறையாகக் கல்வியைத் தொடர முடியாமலும் தொழில் துறையில் பயிற்சி பெற இயலாமலும் இருக்கின்ற இளைஞர் யுவதிகளை அணிதிரட்டி சுயதொழில் பயிற்சி வழங்க திட்டமிட்டுளோம். இதன் மூலமாக வேலையில்லாப் பிரச்சினையைத் தணிக்கவும் அவர்களைச் சுயதொழில் துறைகளில் ஈடுபடுத்துவதன் மூலமாக உற்பத்திகளை ஊக்குவிக்கவும் கூடியதாக இருக்குமென நம்புகின்றோம். மக்கள் நிவாரணங்களில் தங்கிவாழும் நிலையை ஊக்குவிப்பதோ நலன்புரி நிலையங்களில் மனித உழைப்பைச் சக்தியை மடக்கி வைப்பதோ ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு அடித்தளமாக அமையப் போவதில்லை. உழைப்பதற்கு உரிய வாய்ப்பையும் வசதியையும் ஒவ்வொருவருக்கும் கிட்டச் செய்வதன் வாயிலாக உற்பத்தி முயற்சிகளைப் பெருக்குவதே அபிவிருத்திக்கு அடிப்படையாக விளங்கலாம். அந்த வகையில் தொழில் துறைகளில் ஆர்வமுடன் ஈடுபடக்கூடிய இளைஞர் யுவதிகளை உள்வாங்கி பொருத்தமான பயிற்சிகளை வழங்குவதனை இலக்காகக் கொண்டு அபிவிருத்திக்கான தொண்டர்கள் திரட்டப்பட உள்ளனர். இவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்காக வவுனியா மன்னார் மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் பயிற்சி நிலையங்கள் நிறுவப்படவுள்ளன. முதற்கட்டமாக வடபகுதியில் ஆரமபிக்கப்படும் அத்திட்டம் படிப்படியாக விரிவு பெறலாம். “இருளைப் பழிப்பதை விடவும் ஒரு மெழுகுவர்த்தியினைத்தானும் ஏற்றுவது மேலானது” என்பார்கள். அதற்கு ஒப்பாக போர்ச் சூழலுக்குள் சிக்கிக் கொண்டு அல்லல்படும் மக்களின் வாழ்வில் ஓரளவுக்கேனும் ஆறுதல் கிட்டச் செய்ய இத்திட்டம் உதவுமென எண்ணுகிறோம். விடாமுயற்சிக்கும் உழைப்புக்கும் பெயர் பெற்றவர்களான எமது மக்கள் தாம் இழந்து போன வாழ்க்கை நிலையை மீளவும் கட்டி எழுப்புவதற்கு இது உதவுமென்றும் எண்ணுகிறோம்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் இளைய தலைமுறையினருக்கு கணனித்துறை அறிவூட்டலை விரிவாக்கும் வகையில் யாழ்ப்பாண நகரில் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. முதற் கட்டமாக சுமார் 50 கணனிகளைக் கொண்டுள்ளதாக இக் கணனிப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக யாழ்ப்பாண குடாநாட்டு மக்களுக்கு இந்த நூற் றாண்டின் அறிவுத்துறைச் சாளரம் திறந்து வைக்கப்பட்டிருப்பதாகக் கருதுகின்றோம். கல்வித் துறைகளில் ஒரு காலத்தில் சிறப்புற்று விளங்கிய குடாநாட்டுக்கு இக் கணனிப் பூங்கா ஒரு வரப்பிரசாதமாகவே அமையும் என்பது உமது நம்பிக்கை. கணனித்துறைக் கல்வியை வளர்த்தெடுப்பதற்கான வித்துக்களை எமது மண்ணிலிருந்து இப் பூங்கா ஊன்றும்.

வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர நிர்ப்பந்திக்கப்பட்ட மக்கள் பலர்,கடந்த பத்தாண்டு காலத்திற்கும் மேலாக நலன்புரி நிலையங்களில் தங்கி வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.வசதிகளும் வாய்ப்புக்களும் உள்ளவர்கள் “சொந்தமண்” பற்றிய உணர்வே இல்லாமல் வாழத் தலைப்பட்டு விட்டனர்.நலன்புரி நிலையங்களில் தங்கி சிரமமான வாழ்க்கையை நடாத்தும் மக்களுக்கு உதவும் முகமாக வீடமைப்புத் திட்டம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளோம். இதனை சிலர் காழ்ப்புணர்ச்சி காரணமாகக் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்த எதிர்ப்புக்களைக் கண்டு நாம் பின்வாங்கப் போவதில்லை. ஏனெனில் இன்று எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்கள் எப்போதும் இதே போன்ற எதிர்ப்புக் குரலை எழுப்பி தமது சொந்த அரசியல் இலாபங்களை பேணுவதிலேயே முனைப்புக் காட்டி வந்தது வரலாறு தாய் மொழி மூலம் கல்வி என்ற திட்டம் அறிமுகமான போதும் எதிர்த்தார்கள்.அன்னிய இராணுவத் தளங்கள் அகற்றப்பட்ட போதும் எதிர்த்தார்கள்.பாலங்கள் கட்டப்பட்ட போதும் எதிர்த்;தார்கள். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்ட போதும் எதிர்த்தார்கள். வடக்கு  – கிழக்கு மாகாண சபை அமைக்கப்பட்டதையும் எதிர்த்தார்கள்.அந்திய அமைதிப்படையினர் செயற்பட்ட போதும் எதிர்த்தார்கள். அபிவிருத்தியல்ல, அரசியல் உரிமையே தேவை என்றார்கள்.சோறல்ல சுதந்திரமும் முக்கியம் என்றார்கள். ஆனால் சோறும் இல்லாத சுதந்திரமும் இல்லாத இன்றைய சூழலில் இத்தகைய சக்திகள் எதிர்ப்புக் குரலை எழுபு;பிக் கொண்டிருப்பது வெறுமனே தமது இருப்பை வெளிக்காட்டிக் கொள்வதற்காகவே இதனை இந்த மண்ணில் இப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கும் மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

அபிவிருத்தியை முன்னெடுப்பதன் மூலமாக அரசியல் உரிமைக் கோரிக்கையைப் பின் தள்ளுவதாகவும் எங்கள் மீது குற்றம் சுமத்தப் படுகின்றது. அபிவிருத்திப் பணிகளாக நாங்கள் இப்போது முன் வைப்பது உண்மையில் சாதாரண மக்களின் நாளாந்த வாழ்க்கையை மேம்படுத்தும் நடவடிக்கைகளையே தமிழ் பேசும் மக்களின் உரிமைக் கோரிக்கைகள் தொடர்பில் நாங்கள் காத்திரமான எண்ணங்களையே கொண்டிருக்கின்றோம்.நடைமுறைச் சாத்தியமான வகையில் மாற்று வழிகளை முன்வைததிருக்கின்றோம். அடிப்படைக் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான அர்ப்பணிப்பு உணர்வுடனேயே செயற்பட்டு வருகின்றோம். இதற்காகவே நாங்கள் மூன்றம்சம் கொண்ட திட்ட மொன்றை முன்மொழிந்து வருகின்றோம். இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போதுள்ள அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவான வடக்கு – கிழக்கு மாகாண சபைக்கு அரசியல் தலைமைத்துவம் ஏற்படுத்துவதும் அதை முழு அளவிலான அதிகாரங்களுடன் இயங்கச் செய்வதுமே முதலாவது தேவை. இதற்கு தற்போதுள்ள அரசியலமைப்பில் எந்தத் தடையுமில்லை. அதாவது இருப்பதை நடைமுறைப் படுத்துவது என்பது முதலாவது கட்டம். அதைத் தொடர்ந்து அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் கீழான அதிகாரப் பகிர்வை மேலும் விரிவாக்குவது தொடர்பில் ஆளும் கட்சியும் பிரதான எதிர்க்கட்சியும் தமிழ் பேசும் தரப்பு பிரதிநிதிகளுடன் இணக்கம் கண்ட பொதுவான விடயங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும். அதாவது பொதுசன ஐக்கிய முன்னணி அரசினால் முன்வைக்கப்பட்டிருந்த தீர்வுப் பொதி தொடப்பான கலந்துரையாடல்களில் காணப்பட்ட இணக்கங்களை அமுலுக்கு கொண்டு வர வேண்டும். இவை இன்றைய அரசியல்யாப்பு வரம்பிற்குள் நிறைவேற்றப்படக்கூடியவை ஆகும்.எனவே பாராளுமன்றத்தில் மூன்றிலிரு பங்கு பெரும்பான்மை பெறுவது பற்றியோ சர்வஜன வாக்கெடுப்பு பற்றியோ கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இது இரண்டாவது கட்டமாகும் இந்த இரு கட்டங்களும் நடைமுறைப்படுத்தப்படும் காலமானது ஒரு மாறும் காலமாக இருக்கம். இவ்விரு கட்டங்களும் நடைமுறையில் வெற்றி காணும் போது போரை தொடர்வதற்கான நியாயங்கள் எந்தத் தரப்புக்கும் இருக்காது என்பதே எமது நம்பிக்கையாகும்.அந்த நிலையில் தமிழ் பேசும் மக்களின் அபிலாசைகள் தொடர்பான சிங்கள மக்க்ளின் சந்தேகங்கள் தீhக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சுகவாழ்வு என்பதை ஐயமின்றி ஏற்றுக் கொள்ளவும் வழி ஏற்படும். இது, மூன்றாவது கட்டத்தை நோக்கி நகர்த்தும் ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமாதான சகவாழ்வ நிலைநாட்டப்படும் வகையில் இனப் பிரச்சினைக்கான இறுதித் தீர்வு சாத்தியமாகும் கட்டம் மூன்றாவதாக இருக்கும். இதில் சம்பந்தப்பட்ட சகல தரப்புக்களும் பங்களிப்பச் செய்வதற்க எந்தவிதமான தடைகளும் இருக்காது. ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு – கிழக்கு மாகாணத்திற்கென விசேட அதிகாரங்கள் கொண்ட அரசியல் நிர்வாக அமைப்பு தோற்றம் பெற இது வழிவகுக்கும். இதுவே தமிழ் பேசும் மக்க்ளின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் இந்த மூன்று கட்ட யோசனைகள் தொடர்பாக நாங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் முன்மொழிந்து வந்திருக்கின்றோம். குறிப்பாக அண்மையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதின்மூன்றாவது மகாநாட்டிலும் இந்த யோசனைகள் தொடர்பாக பிரஸ்பித்து இருந்தோம் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த இடத்தில் இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக் காட்டுவது பொருத்தும் என நினைக்கிறேன் அதாவது தமிழ் பேசும் மக்கள் எதிர்நோக்கும்  இனப்பிரச்சினை என்பதும் பலிகளத பிரச்சினை என்பதும் வெவ்வேறானவை ஆகும். இனப் பிரச்சினையின் தொடர்ச்சி புலிகளின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் வழிவகுத்தது என்பதில் உண்மை இருப்பினும் இன்று தமிழ் பேசும் மக்களின் வழ்க்கை நலன்களும் அபிலாசைகளும் வேறாகவும் புலிகளின் பிரச்சினைகள் வெறாகவும் மாறிவிட்டன. இவை இரண்டையும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்வதாலோ எந்தப் பிரச்சினையும் இன்றைய சூழலில் தீர்ந்து விடப்போவது இல்லை. புலிகளைப் பொறுத்தவரையில் தமிழ் பேசம் மக்களின் அரசியல் அந்தஸ்தை நிலைநாட்டுவது என்பதை விடவும் தமது அதிகாரத்துவத்தை நிலைநாட்டுவது என்பதிலேயே முனைப்பாக கவனம் செலுத்தி வந்துள்ளனர். இது கடந்த கால அனுபவம்.

தமிழ் பேசும் மக்களின் சார்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயாராக இருப்பதாக புலிகள் சார்பில் கூறப்பட்டு வருகிறது. இந்த பேச்சு வார்த்தைக்கு அடிப்படையாகத் திம்புக் கோட்பாடுகள் இருக்க வேண்டுமெனவும் கூறப்படுகிறது. 1985ல் பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தை யின் பொது பட்டியிலிடப்பட்ட முக்கியமான நான்கு விடயங்கள் திம்புக் கோட்பாடாக முன்வைக்கப்பட்டன என்பது தெரிந்ததே. இந்தக் கோட்பாடு முன்வைக்கப்பட்டபோது தமிழர் தரப்பின் அனைத்த சக்திகளுக்குமிடையிலான ஐக்கியமும் இந்திய மத்திய அரசின் பின்பலமான ஆதரவும் தமிழர் தரப்புக்கு இருந்தது என்பது இரகசியமானது அல்ல. ஆனால் தமிழர் தரப்பின ஐக்கியத்தைக் குலைந்ததும் இந்த அரசைப் பகைத்ததும் புலிகளின் செயற்பாடுகளே ஆகும்.

இதனைச் சீர் செய்ய புலிகளால் இயலவல்லை. மேலும் 1986 பெங்க@ரிலும் 1987ல் புதுடில்லியிலும் 1989 – 1990ல் கொழும்பி லும் 1994ல் யாழ்ப்பாணத்திலருமாக நான்கு தடவைகளில் வெவ்வேறு அரசாங்கங்களுடன் புலிகள் பேச்சுவார்த்தைகளை நடாத்தியிருக்கின்ற னர். இந்த நான்கு சந்தர்ப்பங்களில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலாயினும் புலிகள் திம்புக் கோட்பாடு பற்றி உச்சரிக்க வில்லை. இந்த நான்கு சந்தர்ப்பங்களிலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைகளை நிலை நிறுத்தவதற்கு ஏதுவாக புலிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் என்ன? என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிதொரு விடயமாகும். அவர்கள் இப் பேச்சுவார்த்தைகளில் முன்வைத்த நிபந்தனைகள் அவர்கள் இராணுவ நலன்களை முதன்மைப்படுத்தியிருந்தன என்பது உண்மையாகும்.

அடுத்ததாக, தமிழ் பேசும் மக்களின் அபிலாஷை என்பது புலிகளின் தலைமைத்துவத்திற்குக் கட்டுப்பட்டு வாழுதல்தான் என்று கருதுபவர்கள் தயவுசெய்து புலிகளின் பிரசன்னமுள்ள பகுதிகளுக்குச் சென்று தங்கள் தங்கள் வாழ்ககையை மேற்கொள்வதே அமைதியை நிலைநாட்ட விரும்பும் மக்;களுக்குச் செய்யும் சேவை இருக்கும். புலிகளே தமிழ்ப் பேசும் மக்களின் ஏக பிரதிநிதிகள் எனப் பிரகடனம் செய்து வருபவர்கள் புலிகளன் தலைமைத்துவததிற்குக் கட்டுப்பட்டு வாழச் சென்று விடுவது சிறந்ததாகவிருக்கும். ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு என்பதை நிலைநாட் வேண்டும் என்பதுவே சாதாரண மக்களின் இன்றைய எதிர்பார்ப்பாகும். புலிகளோ தமிழ் ஈழம் என்பதை தாகமாகக் கருதி ஆயுதமேந்திய போரைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். புலிகளால் தொடருவதாகக் கூறப்படும் இராணுவப் பயிற்சி நடவடிக்கைகளும் அண்மையில் தெகிவளைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைத் தாக்குதல் உபகரணங்களும் புலிகள் யுத்த முனைப்பில் இன்னமும் தீவிரம் கொண்டிருப்பதைப் புலப்படுத்தகின்றன. அதேவேளை மலையகத் தமிழ் மக்களின் தலைவ ரும் இலங்கைத் தொட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான திரு. ஆறுமுகன் தொண்டமானைக் கொலை செய்ய புலிகள் மெற்கொண்ட முயற்சி பற்றியும் தற்போது ஆதராரங்களுடன் தகவல் அம்பலமாகியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. இவை காரணமாகப் புலிகளின் தலைமை முன்னெடுக்கும் அரசியல் வழிகாட்டுதல்கள் குறித்து எமக்கு நம்பிக்கை ஏற்படுவதாக இல்லை. எனவே, நான் இதுவரை கூறியவற்றிலிருந்து பலிகளின் பிரச்சினைகள் வேறு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வேறு என்பதை சபையிலிருக்கும் கௌரவ உஞறுப்பினர்கள் மீண்டும் புரிந்த கொண்டிருப்பீர்களென நம்புகின்றேன். எனினும் புலிகளுடன் பேசித்தான் இனப் பிரச்சினைககுத் தீர்வு காண வேண்டுமென எண்ணுபவர்கள் சிலர் இன்னமும் இருக்கக்கூடும். தமிழீழக் கோரிக்கையையும் ஆயுத மோதலையும் கைவிடாத புலிகளுடன் பேசாலாமெனக் கூறுபவர்கள் ஏன் ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதிநிதிகளுடன் இனப்பிரச்சினைக்கான தீர்வு அரசியலமைப்புத் திரத்தங்கள் என்பன தொடர்பான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கக் கூடாதென்ற வினாவினை இங்கு எழுப்ப விரும்புகிறேன்.

—-

ஆரம்பத்திலிருந்தே எங்களுடைய கட்சி அந்த மக்களின் வெளியேற்றத்தைக் கண்டித்து வந்தது மாத்திரமல்லாமல், நாங்கள் அந்த மக்கள் மத்தியில் சென்று எங்களால் முடிந்தளவுக்குச் சகல உதவிகளையும் புரிந்து வந்திருக்கிறோம். ஆரம்பந்தொட்டே நாங்கள் அவர்களை யாழ்ப்பாணத்திற்கு வந்து மீள்குடியமருமாறு கோரிக்கை விடுத்து வந்திருக்கின்றோம். ஆனால் தற்போது யாழ்ப்பாணத்திலிருக்கும் சூழ்நிலையின் காரணமாகத் தங்களால் அங்கு வந்து மீளக் குடியமர முடியாதென்ற கருத்தையே  அவர்கள் தொடர்ந்தும் முன்வைக்கிறார்கள். இருந்தாலும் நாங்கள் அதற்கான முயற்சிகளைத் செய்து கொண்டிருக்கிறோம். அதைவிட அவர்கள் விரும்பி யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் குடியமர வந்தால் நாங்கள் அவர்களை வரவேற்பது மாத்திரமன்றி அவர்கள் முன்பு எந்தத் தரத்தில், எந்த நிலையில் இருந்தார்களோ அந்த நிலைக்கு அந்த தரத்திற்கு நாங்கள் எங்களது விரைவான முயற்சிகளுக்கூடாக அவர்களை இட்டுச் செல்வோம்.

அவர்கள் மீண்டும் யாழ்ப்பாணத்திற்கு வந்தால் அது அவர்களுக்கும் பொருந்தும். ஆனால் இன்றைய நிலையில் அவர்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் எங்களுடைய அமைச்சின் கீழ் வரவில்லை. அவர்கள் கிழக்கின் அபிவிருத்தி புனர்வாழ்வு புனரமைப்புககுப் பொறுப்பான அமைச்சின் கீழேயே வருகிறார்கள். இது தொடர்பாக நாங்கள் –

—-

இது தொடர்பாக அவர்கள் பற்றிய விடயங்களை எங்களிடம் கையளிக்குமாறு ஜனாதிபதியவர்களுடன் பேசிக் கொண்டிருக்கின் றோம். அது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறது.

—-

அவர்கள் இன்று வாழும் பிரதேசங்கள் வடக்கிற்கு வெளியேயுள்ள இடங்களாகவே இருக்கின்றன.

—-

எமது அமைச்சின் பொறுப்பு வடக்குப் பிரதேசத்தில் வாழுகின்ற மக்களுக்காகச் சேவையாற்றவதுதான் அவர்கள் வடக்குப் பிரதேசத்தில் வந்து மீளக் குடியமரத் தயாராக இருப்பார்களேயாயின் அது அவர்களுக்கும் பொருந்தும். ஆனால், இன்று வடக்குக்கு வெளியான புனர்வாழ்வு புனரமைப்பு அனைத்தும் திருமதி பேரியல் அஷ்ரஃப் அவர்களின் அமைச்சின் கீழ் வரும் விடயங்களாக இருப்பதனால் எங்களால் அதுபற்றி எதுவும் செய்ய முடியாத நிலைமை இருக்கின்றது.

—-

இதில் தாரைவார்த்துக் கொடுப்பதா? இல்லையா என்ற பிரச்சினை யில்லை. வடமாகாணத்தில் வாழுகின்ற அல்லது வடமாகாகணத்தில் வந்து மீளக் குடியமர்கின்றவர்களுக்கு எங்களுடைய அமைச்சின் மூலம் உதவி செய்யக் கூடிய நிலையில் தான் நாங்கள் இருக்கின்றோம்.

21 மார்ச் 2003

Related posts:


வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! நாடாளுமன்றில்  செயல...
வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் வறுமையை போக்கவும், வேலைவாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும்- ...
வெளிநாட்டில் குடித்தனம் நடத்தியவர் இங்கே ஊழையிடுகின்றார் - நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...