செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா 20 மே 2000 அன்று நாடாளுமன்றில் உரையாற்றிய உரையின் முழுவடிவம்

Saturday, May 20th, 2000

கௌரவ சபாநாயகர் அவர்களே!

இந்த 12வது பாராளுமன்றத்தின் சபாநாயகராக நீங்கள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதையிட்டு என்னுடைய மகிழ்ச்சிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். கௌரவ பிரதம அமைச்சர் அவர்களும்.கௌரவ எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கட்சித் தலைவர்கள் ஆகியோரும் இந்தப் பாராளுமன்றம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பாகத் தங்களுடைய கருத்துக்களை இங்கு தெரிவித்தார்கள்.

எங்களுக்கு  உங்களோடு இருக்கக் கூடிய நீண்ட கால நட்புக் காரணமாக ஏற்பட்ட அனுபவத்தில் உங்களுக்கு இந்தத் தகுதி உண்டென்று நாங்கள் நம்புகின்றோம். இந்தவகையில் எங்களுடைய முழு ஒத்துழைப்பையும் இந்தச் சபையில் நாம் உங்களுக்குத் தருவதற்குத் தயாராக இருக்கின்றோம்.

எந்த விதமான கட்சி வெறுபாடுகளின்றி ஏகமனதாகத் தங்களை இச்சபையின் சபாநாயகராகத் தெரிவு செய்தது போல இந்த யுத்தத்திற்கும் இனப் பிரச்சினைக்கும் கௌரவமான முறையில் ஓர் அரசியல் தீர்வைக் காண்பதற்கும் இந்தச் சபையில் அங்கம் வகிக்கின்ற சகல கட்சியினரும் தங்களுக்குள் இருக்கக்கூடிய வேறுபாடுகளை மறந்து ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கையோடு விடை பெறுகின்றேன். நன்றி. வணக்கம்.

20 மே 2000

Related posts: