73 TV சனல்களின் உரிமை ரத்து!

இந்திய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் கடந்த சில ஆண்டுகளில் 73 TV சனல்கள், 24 எப்எம் சேனல்கள் மற்றும் 9 பத்திரிக்கை நிறுவனங்களின் உரிமங்களை இரத்து செய்துள்ளது.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் ஏழுந்த கேள்விகளுக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் ராஜியவர்தான் ரத்தோர் கூறுகையில், பதிவேற்றம் செய்யப்படுவதில் நிறுவனங்களின் விதிமுறை மீறல் காரணமாகவே 73 டிவி சேனல்களின் உரிமையை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனக் கூறினார்.
இதில் ஜெஸ்ட் டிவி, காஸ், மவ்ஹா பஞ்சாபி, மவ்ஹா தெலுங்கு, விஷன் எண்டர்டெயின்மெண்ட மற்றும் கீ டிவி ஆகியவற்றும் அடக்கம். இதுமட்டும் அல்லாமல் மேலும் சில நிறுவனங்கள் அனுமதி அளிக்கப்பட்டுக் குறிப்பிடத்தக்க நேரத்தில் துவங்கப்படாத காரணத்தால் உரிமம் ரத்துச் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் போகஸ் என்ஈ, போகஸ் ஹரியானா, எஸ்டிவி ஹரியானா, லெமன் டிவி துவங்கப்பட்டும் பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாக ஒளிபரப்பு உரிமையை வழங்க மறுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் தற்போது 892 தனியார் டிவி சேனல்கள் உள்ளது.மேலும் இந்தியாவில் 42 தனியார் எப்எம் சேனல்கள் மற்றும் 196 கம்யூனிட்டி ரேடியோ சேனல்கள் இருக்கும் நிலையில், 24 சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
Related posts:
|
|