700க்கும் மேற்பட்ட அகதிகள் உயிரிழப்பு!

கடந்த சில நாட்களுக்கள் 700க்கும் மேற்பட்ட அகதிகள் மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் நிறுவனத்தின் பேச்சாளர் கார்லோட்டா சமி, கடந்த வாரத்தின் புதன், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அகதிகள் ஐரோப்பாவை அடையும் முயற்சியில் கடலில் பயணிக்க பொருத்தமற்ற படகுகளில் பயணித்ததால் இத்தாலியின் தெற்கு பகுதியில் படகுகள் மூழ்கியுள்ளன என தெரிவித்துள்ளார்.
இப்படகுகளில் ஒன்று கவிழ்ந்ததைக் காட்டும் காட்சிகள் இத்தாலிய கடற்படை கமராவில் படம் பிடிக்கப்பட்டன. இந்தப் படகிலிருந்து பெரும்பாலான பயணிகளை இத்தாலிய கடற்படை காப்பாற்றியது.
ஆனால், அதில் பயணித்த சுமார் 100க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளார்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
Related posts:
அழகிரி அ.தி.மு.கவுக்கு ஆதரவு - மிரண்டது தி.மு.க.
சுவாதி படுகொலை தொடர்பான உண்மை குற்றவாளிகளின் பெயர் மற்றும் விலாசத்தை வெளியிட்டார் தமிழச்சி!
உலக கிண்ணத்தின்போது யுக்ரைனில் போர்நிறுத்தம் - சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் கோரிக்கை...
|
|