37 வருட பிளவை புதுப்பித்த ட்ரம்ப் – கோபத்தில் சீனா!

Sunday, December 4th, 2016

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தைவான் அதிபர் சாய் இங்-வென்னுடன் பேச்சு நடத்தியுள்ளார். இதன்மூலம், பல ஆண்டுகால அமெரிக்க கொள்கைக்கு எதிராக டொனால்ட் ட்ரம்ப் செயற்பட்டுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ட்ரம்பின் இந்த செயற்பாடு சீனாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுதொடர்பாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது, குறித்த செய்தியில்,தைவான் அதிபர் சாய் இங்-வென்னுடன் டொனால்டு ட்ரம்ப் வெள்ளிக்கிழமை பேசினார்.

அப்போது தைவானுக்கும் – அமெரிக்காவுக்கும் இடையே பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு அம்சங்கள் ஆகியவற்றில் நெருங்கிய உறவை ஏற்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

இவ்வாண்டு தொடக்கத்தில் தைவான் அதிபராக தேர்வான சாய் இங்வென்னுக்கு டொனால்ட் ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். ஆனால், இவர்களில் யார் முதலில் தொலைபேசியில் அழைத்தார்கள் என்ற விவரம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

இருப்பினும், தைவான் அதிபருடன் டொனால்ட் ட்ரம்ப் பேச்சு நடத்தியது அமெரிக்காவில் கொள்கை மாற்றம் ஏற்படும் வாய்ப்பினை எடுத்துக்காட்டவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவின் ஒரு பகுதியே தைவான் என்று அந்நாடு தெரிவித்து வருகிறது.இதன்படி, பெய்ஜிங் விதிப்படி தைவானை சீனாவுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது.

இதற்கு அமெரிக்கா முட்டுக் கட்டையாக இருந்து வருவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபராக தேர்வாகி இருக்கும் டொனால்ட் ட்ரம்ப் தைவான் அதிபருடன் பேசி இருப்பது சீனாவுக்கு மேலும் எரிச்சலை உண்டாக்கியுள்ளது. எனவே சீனா – அமெரிக்கா இடையேயான பிளவு மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 1979ஆம் ஆண்டு தைவானுடன் இராஜங்க ரீதியிலான உறவை அமெரிக்கா துண்டித்தது.இந்த நிலையில் நீண்டகாலமாக துண்டிக்கப்பட்டிருந்த உறவை புதுப்பிக்கும் வகையில் டொனால்ட் ட்ரம்ப் தைவான் அதிபருடன் பேசியிருப்பது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை உண்டாக்கியுள்ளதா இந்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

donaldtrump-

Related posts: