23 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற பிரித்தானியா தீர்மானம்!

பிரித்தானியாவில் தங்கியுள்ள 23 ரஷ்ய இராஜதந்திரிகளை வெளியேற்ற அந்நாட்டின் பிரதமர் தெரேசா மே தீர்மானித்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
பிரித்தானியாவின் சாலிஸ்பரி நகரில் கடந்த 04 ஆம் திகதி வணிக வளாகம் ஒன்றின் வெளியே முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீது நச்சு தாக்குதல் நடத்தப்பட்டதை தொடர்ந்து, குறித்த இந்த நச்சு தாக்குதலில் ஈடுபட்டது ரஷ்யா தான் என பிரதமர் தெரேசா மே குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த சம்பவம் பிரித்தானியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் தெரசா மே தேசிய பாதுகாப்பு கவுன்சிலை கூட்டி ஆலோசனையும் நடத்தினார்.
இதனிடையே ரஷ்யாவின் தலையீடு இருப்பது உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரித்தானிய வெளியுறவு செயலாளர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Related posts:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார் பிரதமர் மோடி!
பேஸ்புக்கிற்கு சோதனையான காலகட்டம் - எச்சரித்துள்ள மார்க் ஸுக்கர்பர்க்!
ரஷ்யாவுக்கு உதவினால் விளைவுகளை அனுபவிக்க நேரிடும் - சீனாவை கடுமையாக எச்சரித்த அமெரிக்கா!
|
|