18 எதிர்ப்பாளர்கள் உயிரிழப்பு – மியன்மாருக்கு சர்வதேச நாடுகளின் கண்டனம்!
Monday, March 1st, 2021
ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக மியான்மரின் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இந்த ஒடுக்குமுறை காரணமாக மியான்மர் முழுவதும் பல நகரங்களில் 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. தலைவர் அன்டோனியோ குடரெஸ் இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிரான சர்வதேச கண்டனத்திற்கு தலைமை தாங்கினார்.
ஆங் சான் சூகி அரசாங்கத்தை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவரக் கோரி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்த சுமார் ஆயிரம் எதிர்ப்பாளர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
ஜேர்மனி புகையிரத நிலையத்தில் கத்தி வெட்டு - ஒருவர் பலி
வடகொரியாவுடன் பேச்சு கிடையாது - டிரம்ப்!
ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து - 30 பேர் உயிரிழப்பு!
|
|
|


