16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை வரையறுக்க பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கவனம் !.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதை வரையறுப்பது தொடர்பில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் கவனம் செலுத்தியுள்ளதாக The Guardian செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவில் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கமைய இந்த சட்டமூலம் விதிக்கப்படவுள்ளதாக The Guardian செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களின் பயன்பாடு சிறுவர்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சட்டமூலத்திற்கு அமைய செயற்படாத சமூக வளைத்தள நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பிரதமரினால் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனை அடுத்த வருட ஆரம்பத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்றும் The Guardian செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
000
Related posts:
|
|