1200 குடியேற்றவாசிகளுக்கு இருப்பிடம்- கனேடிய பிரதமர் அறிவிப்பு!

Friday, February 24th, 2017

தொடர்யுத்தம் காரணமாக, நாட்டைவிட்டு வெளியேறி அல்லலுறும் சுமார் 1200 குடியேற்றவாசிகளுக்கு இவ்வருடம் கனடாவில் இருப்பிடம் வழங்கப்படும் எனகனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ அறிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த குடிவரவு அமைச்சர் அஹமட் ஹூசைன் (Ahmed Hussen), இதுவரை சுமார் 400 யஸீதி இனகுடியேற்றவாசிகளுக்கு கனடாவில் இருப்பிடம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவத்துள்ளார். அதன் பொருட்டு சுமார் 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் மற்றும் ஐ.எஸ்தீவிரவாதிகளின்  பிடியில் சிக்கித்தவித்த யஸீதி இனமக்கள் சொல்லானாதுன்பங்களை அனுபவித்துள்ளதாக குறிப்பிட்ட ஹூசைன், கனடாவில் இருப்பிடம் அளிக்கப்படும் குடியேற்றவாசிகள் தங்களது குடும்பத்தாருடன் இணைந்து இருப்பதற்கு வழிவகைகள் செய்துகொடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேற்குறிப்பிட்டவாறு குடியேற்றவாசிகள் அவர்களது குடும்பத்தாருடன் இணைந்து அமைதியான சூழலில் வாழ்வதன் மூலம், கனேடிய வாழ்க்கை முறைக்கு பழகவும் அதுவழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

justin-trudeau-720x480

Related posts: