வெள்ளம் – இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 114 ஆக அதிகரிப்பு!
Monday, August 12th, 2019
இந்தியாவில் கனமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளத்தின் காரணமாக இதுவரையில் 114 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கேரள மாநிலத்தில் மாத்திரம் 57 பேர் வரை உயரிழந்துள்ளதோடு, 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளனர்.
கனமழையின் காரணமாக மூடப்பட்டிருந்த கொச்சின் விமான நிலையம் இன்று பிற்பகல் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களை பாதுகாப்பான இடங்களுக்க வெளியேற்றும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அத்தோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுகள் வழங்கும் நடவடிக்கைகளையும் பாதுகாப்பு படையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கேரளாவை போன்றே கர்நாடகா, மாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இந்தியாவில் கைது செய்யப்பட்டவரை நாடு கடத்த தீர்மானம்!
கட்டார் சர்ச்சை ரமழான் மாதத்தின் முடிவிலேனும் தீர்க்கப்பட வேண்டும் - எர்டோகன்!
53 பேருடன் இந்தோனேசியாவின் நீர்மூழ்கி கப்பல் மாயம்!
|
|
|


