மின்சார தடை: 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிப்பு!
Monday, August 5th, 2019
இந்தோனேசிய தலைநகர் ஜகர்த்தா உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று ஏற்பட்ட நீண்டநேர மின்சார விநியோகத்தடை காரணமாக, 10 மில்லியனுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மின்சார விநியோக கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறே இந்த மின்விநியோக தடைக்கு காரணம் என அந்த நாட்டு அரச மின்சக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சுமார் 9 மணித்தியாலங்களுக்கு இந்த மின்சார விநியோகத்தடை நீடித்துள்ளது.
இதன் காரணமாக, உட்கட்டமைப்பு சேவைகள் மற்றும் தொடருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மின்சார தொடருந்தின் இயக்கம் செயழிலந்ததன் காரணமாக அதன் கதவுகள் திறக்கப்படாதமையினால், சிறு குழந்தைகள் உள்ளிட்ட பெருமளவான பயணிகள் பெரும் பாதிப்பை எதிர்நோக்கினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், வீதிப் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் ஒளிராதமையினால், தலைநகர் ஜகர்த்தா உள்ளிட்ட நகரங்களில் பாரிய போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், மின்சார விநியோகத் தடை காரணமாக, மருத்துவமனைகள் மற்றும் வானூர்தி தளங்கள் என்பனவற்றில் பாரியவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும், அவற்றின் பணிகள் ஜெனரேட்டர்களைக் கொண்டு முன்னெடுக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், குறித்த மின்சாரn விநியோகத்தடை தொடர்பில் குழு ஒன்றைய அமைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக இந்தோனேசியத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
|
|
|


