சோமாலியாவில் 38 ஊடகவியலாளர்கள் கைது !

கடந்த ஆண்டில் மாத்திரம் சோமாலியாவில் 38 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் தாக்கப்பட்டும், துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டும், சிலர் கொல்லப்பட்டும் உள்ளதாக சோமாலிய ஊடகவியளாளர் அமைப்பொன்று தெரிவித்துள்ளது.
அதேநேரம், தேர்தல் காலப்பகுதியில் அரசாங்கத்தின் மோசடிகள் குறித்து அறிக்கையிட்டமை தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டில் 16 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டிருந்ததுடன், 2016 ஆம் ஆண்டில் 12 ஊடகவியலாளர்களும் கைது செய்யப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த ஆண்டிலேயே அதிகளவான ஊடகவியலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சோமாலிய ஊடகவியலாளர் அமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
Related posts:
பதவி துறந்த பின்பும் பணமழையில் நினையும் பிரதமர்!
பெல்ஜியத்தில் பூனையையும் தாக்கிய கொரோனா!
இந்தோனேசியாவின் எரிபொருள் சேமிப்புக் கிடங்கில் பாரிய தீ விபத்து - 17 பேர் பலி - 50க்கும் அதிகமானோர் ...
|
|