சிரியாவில் வான் தாக்குதல்: 14 பேர் பலி!

சிரியாவின் இட்லிப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதலில் 14 பொதுமக்கள் பலியாகினர்.
அந்த நாட்டிலுள்ள உள்ள கண்காணிப்பு அமைப்புக்கள் இதனை தெரிவித்துள்ளன. பலியானவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேரும் அடங்குவதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு எந்தவித அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை. சிரியாவில் நிலவும் மோதல்கள் காரணமாக இட்லிப் பிராந்தியத்தை சேர்ந்த சுமார் மூன்று மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
Related posts:
இலண்டன் மாநகர மேயரானார் சாதிக் கான்
சசிகலாவுக்கு கிடைத்தது பரோல்!
15 கோடி குழந்தைகளை வறுமையில் தள்ளிய கொரோனா - யுனிசெப் தகவல்!
|
|