இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 30 பேர் பலி!
Monday, September 30th, 2019
இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை காலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 5.16 மணியளவில் சேரம் தீவின் கிழக்கு பகுதியில் 6.5 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன் பின்னர், காலை 6.46 மணியளவில் மாலுக்கு மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தில் 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகவும் 150-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பேரிடர் மீட்பு படை உயரதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
Related posts:
ஸ்டாலின் வருவது தெரிந்திருந்தால் முன்வரிசை ஆசனம் ஒதுக்கியிருப்பேன் - முதல்வர் ஜெயா அறிக்கை!
மூன்று மாதங்களுக்கு அவசர நிலை அறிவிப்பு!
பழைமை வாய்ந்த தேவாலயத்தில் தீ விபத்து!
|
|
|


