இது நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணம் – பாகிஸ்தான் பிரதமர்!
Saturday, September 28th, 2019
அணு ஆயுத வல்லமை கொண்ட நாடு இறுதிவரை போரிட்டால் விளைவுகள் மிகவும் அபயாகரமானதாக இருக்கும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அணு ஆயுதம் கொண்ட ஒரு நாடு இறுதிவரை வரை போராட வேண்டுமென நினைத்தால் அது எல்லை கடந்து உலக அளவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.
காஷ்மீர் மக்கள் தங்களது உரிமையை தாங்களே தெரிவுசெய்துகொள்ளலாம் என ஐக்கிய நாடுகள் சபை உத்தரவாதம் அளித்தது.ஆனால், தற்போது காஷ்மீர் மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், இது பேச்சுவார்த்தைக்கான தருணம் அல்ல என்றும், நடவடிக்கை எடுக்க வேண்டிய தருணமாகும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
அந்த நடவடிக்கையில் முதன்மையானது இந்திய அரசு காஷ்மீரில் அமுல்படுத்தியுள்ள கட்டுப்பாடுகளை உடனடியாக தளர்த்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|
|


