அதி உச்ச பாதுகாப்புடன் அமெரிக்க, வடகொரிய அதிகாரிகள் சந்திப்பு!

வடகொரிய அதிகாரிகளும் அமெரிக்க அதிகாரிகளும் அணுவாயுதப் பேச்சுவார்த்தைக்காக நேற்று சுவீடன் தலை நகரான ஸ்டாக்ஹோமில் சந்தித்தனர்.
வடகொரியாவின் கிம் மியோங் கில்லும் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதரான ஸ்டீவன் பீகனும் பேச்சுவார்த்தை நடத்தும் குழுக்களில் இடம்பெற்றனர்.
பேச்சுவார்த்தை ஸ்டாக்ஹோம் அருகில் உள்ள தீவு ஒன்றில் நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட இடத்துக்குப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், பேச்சுவார்த்தை நல்ல தீர்வுக்கான பாதையை அமைத்துத் தரும் என தாம் நம்புவதாக வடகொரிய அதிகாரி கிம் மியோங் கில் கூறியுள்ளார்.
Related posts:
ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு!
இந்தியர் மூவருக்கு அவுஸ்திரேலியாவில் சிறப்பு விருது!
மீண்டும் பயங்கரவாத தாக்குதல் - இலண்டனில் பொதுமக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை!
|
|