ஹிலாரியின் பிரசார கணினி செயல் வரைவுக்குள் ஊடுருவல்!

Saturday, July 30th, 2016

ஹிலாரி கிளிண்டனின் அதிபர் பிரசாரங்களுக்கு பயன்படுத்தப்படும் புரோகிராமிங் என்ற அழைக்கப்படும் கணினி செயல்வரைவு ஒன்று ஊடுருவப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊடுருவியவர்கள், கணினி அமைப்பிற்குள்ளும் நுழைந்துள்ளதாக கிளிண்டன் பிரசாரங்களை நிர்வகிக்கும் மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக, தங்களுடைய அமைப்பும் அனுமதியின்றி ஊடுருவப்பட்டதாக நாடாளுமன்றத்தில் உள்ள ஜனநாயகக் கட்சியின் நிதி திரட்டும் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊடுருவலை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் ரஷியா புலனாய்வு நிறுவனங்களுடன் தொடர்பில் உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளன. பல்வேறு இணைய ஊடுருவல்களின் தகவல்களை ஆராய்ந்து வருவதாக எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், நடைபெற்ற இதே போன்ற மற்றொரு சம்பவத்தில் ரஷியாவின் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. அனுமதியின்றி இணையம் வழியாக திருடப்பட்ட ஆயிரக்கணக்கான ஜனநாயக கட்சியினரின் மின்னஞ்சல்களை விக்கிலீக்ஸ் சமீபத்தில் வெளியிட்டது.

Related posts: