வைகோ மருத்துவமனையில் அனுமதி!
Sunday, August 18th, 2019
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றககழக எம்பி வைகோ மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது அரசியலில் மிகவும் தீவிரமாக செயலாற்றிக்கொண்டு இருக்கின்ற நிலையில், தமிழக அரசியலில் மட்டுமின்றி அவர் தேசிய அளவிலும் அதிகம் கவனம் பெற்றுள்ளார்.
முக்கியமாக காஷ்மீர் பிரச்சனையில் இவர் பேசியது டெல்லி அரசியலையே குலுக்கியிருந்தது.
அரசியலில் மீண்டும் தலைதூக்கி இருப்பபதோடு, வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதுடன், பொது விழாக்களிலும் வைகோ கலந்து கொள்வதாலும் அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதயைடுத்து வைகோ மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடலில் ஏற்பட்டு இருக்கும் சிறு சிறு பிரச்சனைகளை சரி செய்வதற்கும், ஆலோசனைகளை பெறுவதற்கும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
|
|
|


