வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது – கேரளா உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Saturday, January 7th, 2023

கேரளாவில் சேவை மற்றும் நடத்தை விதிகளை மீறி நடக்கும் ஊழியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கேரள உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.

கேரள உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான டிவிசன் பென்ச் இந்த மனுவை விசாரித்தது.

இதன்போது, ‘அரசு ஊழியர்கள் அவர்களின் நடத்தை விதிகள், அரசாங்க சுற்றிக்கைகள் மற்றும் பொதுமக்களை பாதிக்கும் அறிவிப்புகளை மீறி வேலை நிறுத்தம் செய்ய சட்டப்பூர்வ உரிமை இல்லை. இதனை மீறி வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்க கூடாது.

கடந்த ஆண்டு நடந்த வேலை நிறுத்த போராட்டத்தின் போது அதில் பங்கேற்ற அரசு ஊழியர்களுக்கு அரசு சம்பளம் வழங்கி உள்ளது.

இது அவர்களை ஊக்குவிப்பது போல அமையும். எனவே இனி இதுபோன்ற விவகாரங்களில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என உத்தரவிட்டது.

Related posts: