வெள்ளப் பெருக்கு, நிலச்சரிவு – இந்தோனேசியாவில் 31 பேர் உயிரிழப்பு!
Tuesday, April 30th, 2019
இந்தோனேசியா நாட்டின் பெங்குலு மாகாணத்தில் தொடர்ந்து பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
தாழ்வான பகுதிகளில் வசித்த சுமார் 12 ஆயிரம் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு தற்காலிக நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மாகணத்தின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதிலும் மீட்பு படையினர் சென்றடைவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்துகளில் 31 பேர் உயிரிழந்ததாகவும், காணாமல் போன 13 பேரை தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் மீட்பு மற்றும் நிவாரணப்பணிக்குழு அதிகாரி தெரிவித்துள்ளார்.
Related posts:
அமெரிக்கா - வடகொரியா ஜனாதிபதிகளுக்கிடையே அடுத்த மாதம் நேரடி சந்திப்பு!
அணு திட்டம் குறித்து இணக்கப்பாடு - ஈரானின்!
சர்வதேச விமான நிலையங்களை திறக்க வேண்டாம் - உலக சுகாதார அமைப்பு கோரிக்கை!
|
|
|


