வெடித்துச் சிதறிய கவச வாகனம் – பிரான்ஸ் வீரர்கள் இருவர் பலி!
 Sunday, September 6th, 2020
        
                    Sunday, September 6th, 2020
            
மாலியில் கவச வாகனம் வெடித்து விபத்துக்குள்ளானதால் இரு பிரான்ஸ் நாட்டு வீரர்கள் உயிரிழந்துள்ளதாக பிரான்ஸின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இறந்த வீரர்களுக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தி – சஹேல் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டுள்ள பிரான்ஸ் இராணுவத்தின் தைரியத்தையும் உறுதியையும் பாராட்டியுள்ளார்.
அல்-கைதா மற்றும் இஸ்லாமிய அரசுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுவதற்காக பிரான்ஸ் தனது பார்கேன் இராணுவ நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 2013 முதல் மேற்கு ஆபிரிக்காவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படையினரை நிறுத்தியுள்ளது.
இதேவேளை மாலியின் வடகிழக்கு பிராந்தியமான கிடாலில் உள்ள டெசாலிட் என்ற பகுதியில் சனிக்கிழமை நடந்த வெடிவிபத்தில் மற்றொரு சிப்பாய் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஆப்கானிஸ்தானில் 5 விமான நிலைய பெண் ஊழியர்கள் சுட்டுக் கொலை!
துபாய் இளவரசி எங்கே?  தகவல் வெளியிட வலியுறுத்தல்!
ஜப்பானில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையும் விடுப்பு!
|  | 
 | 
 
            
        


 
         
         
         
        