விமானிகள் வேலை நிறுத்தம்: 3 லட்சத்திற்கு மேலானோர் பாதிப்பு!
Saturday, November 26th, 2016
விமானிகளின் வேலைநிறுத்த போராட்டம் மூன்றாவது நாளாக தொடர்கின்ற நிலையில், ஜெர்மனி பயணியர் போக்குவரத்து நிறுவனமான லூஃப்தான்ஸாவின் 800-க்கு மேற்பட்ட விமான பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த விமானிகள் வைக்கின்ற சுமார் 4 சதவீத ஊதிய உயர்வு கட்டுபடியாகாது என்று லூஃப்தான்ஸா நிறுவனம் கூறுகிறது.சமீபத்திய இந்த வேலைநிறுத்தம் புதன்கிழமை தொடங்கிய நிலையில், உள்நாட்டிலும், ஐரோப்பாவிலும் 3 லட்சத்திற்கு மேலான பயணியர் பாதிக்கப்பட்டுள்ளனர்.2014 ஆம் ஆண்டு முதல் இந்த விமான போக்குவரத்து நிறுவனத்தில் நடைபெறும் 14-வது வேலைநிறுத்தம் இதுவாகும்.

Related posts:
100 சடலங்கள் மொசூல் புறநகரில் கண்டுபிடிப்பு!
வாட்ஸ் ஆப் குழுவின் அட்மினா? சிறைக்கு செல்லும் அபாயம்!
ஆபிரிக்க நாடுகளில் கனமழை - உயிரிழந்தோர் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு!
|
|
|


