விமானப் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பயணிகள் சோதனைச் சாவடிகளில் இனி பாதணிகளைக் கழட்டத் தேவையில்லை!
Wednesday, July 9th, 2025
அமெரிக்காவில் விமானப் போக்குவரத்தினை மேற்கொள்ளும் பயணிகள் சோதனைச் சாவடிகளில் தங்கள் பாதணிகளைக் கழற்ற வேண்டிய அவசியம் இனி ஏற்படாது என அந்நாட்டின் பாதுகாப்புத் துறைச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem)தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் புதிய கொள்கை அமலுக்கு வருவதாக நோயம் கூறினார்.
இது வரை காலமும் விமான நிலையங்களில் சோதனை நடவடிக்கைகளின் போது பயணிகள் தங்கள் பாதணிகள், இடுப்புப் பட்டி உள்ளிட்ட பொருட்களை கழட்ட வேண்டிய நிலை காணப்பட்டது. இதனால் பயணிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்நிலையிலேயே பயணிகளின் நலன் கருதி அமெரிக்கா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இப்புதிய திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விமான நிலையத்தில் தனிநபர்களை தங்கள் காலணிகளுடன் சோதனையிடக்கூடிய நவீனமயப்படுத்தப்பட்ட திரையிடல் இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகள் மீது ‘தான் முழுமையான நம்பிக்கை வைத்திருப்பதாகவும் நோயம் உறுதியளித்தார்
000
Related posts:
|
|
|


