விமானத்தில் பயணம் செய்த பருந்துகள்

Thursday, February 2nd, 2017
சவுதி அரேபிய இளவரசரின் சுமார் 80 பருந்துகள் விமானத்தில் பயணம் செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு நாடுகளின் தேசிய பறவையாக பருந்து காணப்படுகின்றது.இதன் காரணமாக அரபு நாடுகளில் அவற்றை போற்றி பாதுகாக்கப்படுவதோடு, ஐக்கிய அரபு நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ய பருந்துக்களுக்கு பாஸ்போர்ட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் பருந்துக்களுக்கு பக்ரைன், குவைத், ஓமன், கட்டார், சவுதி அரேபியா, பாகிஸ்தான், மொராக்கோ மற்றும் சிரியா ஆகிய நாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்ய முடியும்.
இதற்கமைய சவூதி இளவரசரின் 80 பருந்துக்களும் விமான பயணிகளுடன் அமர்ந்து இருந்தத்துடன், அவற்றின் கண்கள் கட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும் பாதுகாப்பு கருதி பருந்துக்களை இருக்கைகளின் கீழ் பகுதியில் கட்டப்பட்டிருந்ததாக வெளிநாட்டு ஊடகங்ள் தெரிவித்துள்ளன.

Hawks-310117-seithyworld

Related posts: