வாக்குச் சீட்டு மூலமே தேர்தலை நடத்த வேண்டும் -அமெ.முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் !

Friday, June 8th, 2018

முறைகேடுகளைத் தடுப்பதற்காக வாக்குச்சீட்டு மூலம் தேர்தலை நடத்த வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கிளிண்டன் கூறியுள்ளார்.

இந்தியாவில் நீண்ட காலமாக எலக்ரோனிக் வாக்கு எந்திரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் முறைகேடு நடக்கின்றன என்றும் மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கே மாற வேண்டும் என்று பல எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இப்போது இதே போன்ற கோரிக்கை அமெரிக்காவிலும் எழுந்துள்ளது. 2016 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் டொனால்ட் ட்ரம்பும் முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். தேர்தலில் ஹிலாரி கிளிண்டன் தான் வெற்றி பெறுவார் என்று கருத்து கணிப்புகள் கூறின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.

ஹிலாரி கிளிண்டன் வெற்றி பெறுவதை விரும்பாத ர~;யா, வாக்குப்பதிவு கணினிகளை ஹேக்கிங் செய்து வாக்குகளை ட்ரம்புக்கு ஆதரவாக மாற்றிவிட்டதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதை ர~;யா மறுத்துள்ளது. ஆனாலும் சந்தேகம் நீடித்து வருகிறது.

அமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. அங்கு நாடு முழுவதும் ஒரே முறையில் தேர்தல் நடத்தப்படுவது இல்லை. தேர்தலை எப்படி நடத்துவது என்பது குறித்து அந்தந்த மாகாணங்களே முடிவு செய்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

இதன்படி சில மாகாணங்களில் வாக்குச் சீட்டு முறை உள்ளது. சில மாகாணங்களில் வாக்கு எந்திரங்களைப் பயன்படுத்துகின்றார்கள். இன்னும் சில மாகாணங்களில் கணினி மூலம் இணையதளம் வழியாக வாக்குப் பதிவு செய்யும் நடைமுறையை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு 30 மாகாணங்களில் கம்யூட்டர் வாக்குப்பதிவு முறை நடைபெற்றது. இதில் தான் 21 மாகாணங்களில் கம்ப்யூட்டரில் வைரஸ்களை அனுப்பி ஹேக்கிங் செய்து மோசடி செய்துவிட்டதாக கூறப்படுகின்றது.

எனவே இந்த மோசடி நடக்காமல் இருக்க மீண்டும் வாக்குச் சீட்டு முறைக்கு வரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி பில்கிளிண்டனும் இப்போது அந்த கோரிக்கையை வலியுறுத்தி இருக்கிறார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்:

எலெக்ரோனிக் சாதனங்கள் மூலம் வாக்குப் பதிவு செய்வதில் பாதுகாப்பு உள்ளது என்பதை உறுதி செய்ய முடியாத நிலைமை இருக்கிறது. அதில் தவறு நடப்பதற்கு பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.

எனவே தவறே நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் வாக்குச் சீட்டு முறைதான் சிறந்தது. எனவே அதற்கு மாகாணங்களும் மாறவேண்டும். தேர்தல் சரியான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே எலெக்ரோனிக் வாக்கு முறைக்கு மாறி இருந்த அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணம் இனி வாக்குச் சீட்டு முறையை பயன்படுத்தப்போவதாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: