வழக்கிலிருந்து நடிகர் சல்மான் கான் விடுதலை!

Thursday, January 19th, 2017

இந்தித் திரைப்பட நடிகர் சல்மான் கான்,சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர்,மான் வேட்டையாடச் செல்லும் போது உரிமம் இல்லாத துப்பாக்கியைப் பயன்படுத்தினார் என்ற வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரிலுள்ள நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கில், சாட்சியம் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து வழக்கைத் தள்ளுபடி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பு மேல் முறையீடு செய்யலாம்

சல்மான் கான் 1998-ஆம் ஆண்டில் திரைப்படப்பிடிப்பு ஒன்றின் போது பாதுகாக்கப்பட்ட மானினத்தைச் சேர்ந்த மான் ஒன்றை கொன்றதாக இரு வழக்குகளை சந்தித்து, அந்த வழக்குகளிலும் விடுதலை பெற்றார்.

ஆனால், அவர் மீது இன்னும் ஒரு வழக்கு இருக்கிறது. இதற்கு முன்னர் 2015-ஆம் ஆண்டில் சல்மான்கான், நடைபாதைவாசி ஒருவர் மீது காரை ஓட்டி அவரைக் கொன்று தப்பியோடிய வழக்கில் தண்டனை பெற்று, அத்தண்டனை மேல் முறையீட்டில் ரத்து செய்யப்பட்டது.

_93643475_salaman

Related posts: