வடகொரிய தூதரக அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனரா? தென்கொரிய செய்திகளால் பரபரப்பு!

Wednesday, October 5th, 2016

சீனத் தலைநகர் பீஜிங்கில் பணியில் இருந்த மூத்த வடகொரிய தூதரக அதிகாரி, அங்கிருந்து வெளியேறி விட்டதாக யோன்ஹாப் என்ற தென்கொரிய செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

வடகொரிய சுகாதார அமைச்சகத்தில் பணியாற்றி வந்த இந்நபர், தனது குடும்பத்துடன் கடந்த மாதத்தில் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் வெளியிட்ட ஜுங்ஆங் இல்போ என்ற தென்கொரிய பத்திரிக்கை, மேற்கூறிய வடகொரிய சுகாதார அமைச்சக பணியாளர் மற்றும் இன்னொரு வடகொரிய தூதரக பணியாளர் ஆகியோர் ஜப்பானில் தஞ்சம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால், இது குறித்த அம்சங்கள் எதுவும் தனக்கு தெரியாது என்று ஜப்பான் தூதரக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இவை நிரூபிக்கப்பட்டால், வடகொரிய அதிபரான கிம் ஜாங்-உன்னின் ஆட்சியை கைவிட பல மூத்த வடகொரிய பணியாளர்கள் தங்கள் பணிகளை விட்டு வெளியேறும் சம்பவங்களில் இந்த சம்பவங்களும் சேரும்.

_91528354_600956110

Related posts: