வடகொரியா விவகாரம்: இராணுவ மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்
Sunday, August 13th, 2017
வடகொரியா விவகாரம் தொடர்பில் இராணுவ மோதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என தெரிவித்த ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லவ்ரோவ் அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் அச்சுறுத்தல்கள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவில் நடத்தப்பட்ட கருத்துக்களம் ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவத்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அவர் உரையாற்றுகையில், “வடகொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான கடும் வாதங்கள் தற்போது எல்லை மீறிச் செல்கின்றன. இதனால் இராணுவ மோதல்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து செல்கின்றன” என தெரிவித்தார்.
அத்துடன், ரஷ்யா மற்றும் சீனா ஒத்துழைப்பிலான திட்டம் ஒன்றில் மேற்படி இரு நாடுகளும் அக்கறை செலுத்துவது சிறந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த திட்டத்தில் இரு நாடுகளும் இணையும் பட்சத்தில் வடகொரியா தனது ஏவுகணைச் சோதனைகளை முடிவுக்கு கொண்டுவரும் எனவும் அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் பாரிய அளவிலான இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்வதை நிறுத்தும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


