வடகொரியாவில் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இராணுவத் தளபதிக்கு கட்சிப் பதவி!

வடகொரியாவில் இராணுவ தளபதி யாக பதவி வகித்து வந்தவர் ரி யாங் கில். இவர் ஊழல் மற்றும் ஆளும் கட்சியில் நபர்களை இணைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் தொடர்பில் கடந்த பெப்ரவரி மாதம் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
எனினும் அந்த விடயம் அந்த நாட்டின் அரசால் உறுதி செய்யப்படவும் இல்லை. மறுக்கப்படவும் இல்லை.
இருப்பினும் அந்த நாட்டின் புதிய இராணுவ தளபதியாக ரி மியாங் சூ என்பவர் உடனடியாக நியமிக்கப்பட்டார்.
வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே தீவிர மோதல் போக்கு நிலவிய காலகட்டத்தில் இது இடம்பெற்றது.
ஆனால் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ரி யாங் கில்லுக்கு வடகொரியாவில் இப்போது நடந்து முடிந்துள்ள ஆளும் தொழிலாளர் கட்சி மாநாட்டின்போது கட்சிப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அவரது பெயர், கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.
Related posts:
அமெரிக்கா - தென் கொரியா ராணுவ பயிற்சி: ஆணு ஆயுதம் ஏவுவோம் என வடகொரியா எச்சரிக்கை!
பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற பஸ் விபத்திற்குள்ளானதில் உத்தர பிரதேசத்தில் 15 பேர் பலி!
அயர்லாந்து பிரதமர் லியோ வட அயர்லாந்திற்கு முதல் உத்தியோகப்பூர்வ விஜயம்
|
|