வங்கியின் ஆளுநர் தனது பணியில் நீடித்திருப்பதாக அறிவிப்பு!

Tuesday, November 1st, 2016
இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் தனது பதவியில் ஒரு ஆண்டு அதிகமாக இருக்க எடுத்துள்ள முடிவை பிரித்தானிய பிரதமர் தெரீசா மே வரவேற்றுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலக வாக்களித்ததை அடுத்து, ஒன்றியத்துடன் நடக்கும் பேச்சுவார்த்தையின் போது, பிரித்தானியா  பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த உதவ, தான் ஜூன் 2019 வரை பணியில் இருக்கப்போவதாக மார்க் கார்னி கூறியுள்ளார்.

அவரது அறிவிப்பு அவரது எதிர்காலத்தைப் பற்றிய ஊகங்களை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் நடந்த பிரெக்ஸிட் வாக்கெடுப்பிற்கு முன்னதாக,மார்க் கார்னி பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகினால் ஏற்படும் சாத்தியக்கூறான எதிர்மறையான பொருளாதார விளைவுகள் பற்றிய அப்பட்டமான எச்சரிக்கைகளை விடுத்தற்காக, ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்ற தரப்பைச் சேர்ந்தவர்கள் அவரைக் கடுமையாக விமர்சனம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

_92204631_1 (1)

Related posts: