ரஷ்ய இராணுவம் லிபியப் பணியில் இல்லையாம்!

Saturday, August 5th, 2017

லிபியாவின் ஒப்புதல் இன்றி ரஷ்ய இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்தை ரஷ்யா முற்றாக மறுத்துள்ளது.

குறித்த விடயம் தொடர்பில், வெளிவிவகாரங்களுக்கான ஐரோப்பிய கவுன்சில் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது.

குறித்த அறிக்கையில், ரஷ்ய இராணுவத்தினர் மாத்திரம் அல்லாது ஏனைய நாடுகளினது இராணுவத்தினரும் லிபியாவில் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் மேற்படி விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த ரஷ்ய அதிகாரி ஒருவர், “லிபியாவில் ரஷ்ய இராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. பாதுகாப்பு தொடர்பான லிபிய பிரதிநிதிகள் குழுவை நான் சந்தித்தேன். ரஷ்ய வீரர்கள் லிபியாவில் இல்லை என்பதை அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்” என தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில், “லிபியாவின் சர்ச்சை நிலவரம் தொடர்பிலேயே ரஷ்யா கண்காணித்து வருகின்றது” என தெரிவித்துள்ளார்.

Related posts: