ரஷியாவுக்கான தடை பாரபட்சமானது – புதின்

ரஷியாவின் விளையாட்டு வீர்ர்களை ரியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் பங்கேற்க தடை விதித்திருப்பது பாரபட்சமானது என்று அதிபர் விளாடிமிர் புதின் விமர்சித்துள்ளார்.
பரவலான ஊக்கமருந்து பயன்பாட்டால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரஷியாவுக்கு விதித்திருந்த தடையை அகற்ற போவதில்லை என சர்வதேச தடகள கூட்டமைப்பு முடிவுசெய்துள்ளது.
இந்த தடையை அகற்ற முயற்சிக்க போவதாக புதின் தெரிவித்திருக்கிறார். கடும் ஊக்கமருந்து கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டிருப்பதை உறுதி செய்தால் ரஷிய வீரர்கள் தனிப்பட முறையில் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று பன்னாட்டு தடகள வீரர்கள் அமைப்புகளின் கூட்டமைப்பு வாய்ப்பை வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
தாக்குதலுக்கு தயாராகும் வடகொரியா - கிம் ஜோங் வுன் ஆவேசம்
வாகன விபத்து: துபாயில் 17 பேர் உயிரிழப்பு!
தொழில்நுட்பங்களுக்கான போட்டியில் மேற்கு நாடுகளை பின்தள்ளி சீனா முன்னிலை!
|
|