மொஸாம்பிக்கில் பாரிய சூறாவளி – உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
Tuesday, March 19th, 2019
ஆப்பிரிக்க நாடான மொஸாம்பிக்கில் இடாய் சூறாவளியால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000ற்கு மேல் அதிகரிக்கக்கூடும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.
இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஜனாதிபதி பிலிப்பே நியுஸி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்துள்ளார்.
இந்த சூறாவளி காரணமாக நாட்டின் பெரும்பாலான இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன்,தகவல் தொடர்பும் தடைப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை மொஸாம்பிக்கின் துறைமுக நகரான பெய்ரா (Beira) பெரிதும் பாதிக்கப்பட்டதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அமெரிக்காவில் குண்டுவெடிப்பு: 15 க்கும் அதிகமானோர் காயம்!
எமர்சன் நங்கக்வா ஜிம்பாப்வே அதிபராக பொறுப்பேற்பு!
தெற்காசியாவில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது - யுனிசெஃப் தெரிவி...
|
|
|


