மொசூல் பல்கலைக்கழகத்தை ஈராக் அரசு படை கைப்பற்றியது!

Sunday, January 15th, 2017

மொசூல் நகரத்தில் இருந்து இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் குழுவினரை ஒழித்துவிடும் போர் நடவடிக்கையில், மொசூல் பல்கலைக்கழகம் முழுவதையும் அரச படைகள் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதாக ஈராக் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

மொசூல் தங்களுடைய முக்கிய தளங்களில் ஒன்றாக இந்த பல்கலைக்கழகத்தை ஐ.எஸ். பயன்படுத்தி வந்த நிலையில், இதனை கைப்பற்றுவதற்கான சண்டை ஒரு நாளுக்கு முன்னர் தொடங்கியது.

ஆயுதங்களை உருவாக்குவதற்கான இரசாயனங்கள் இந்த பல்கலைக்கழக வளாகத்தில் கண்டறியப்பட்டதாக இராக் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இந்த பல்கலைக்கழகத்தை மீண்டும் கைப்பற்றியிருப்பது அரசு படைப்பரிவுகளுக்கு கிடைத்திருக்கும் குறிப்பிடத்தக்க கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இன்னொரு முக்கிய வெற்றியாகும்.

ஐ எஸ் பயங்கரவாத அமைப்பு மொசூல் மக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அத்துடன் டைகிரிஸ் நதியால் பிளவுப்பட்டுள்ள மோசூலின் கிழக்கு பகுதி முழுவதையும் தங்களுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு நெருங்கி வந்திருப்பதாக இராணுவம் கூறியுள்ளது. ஐஎஸ் இன்னும் இதன் மேற்குப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

1-51

Related posts: