மேலும் வெப்பம் அதிகரிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன்

Wednesday, May 4th, 2016

தமிழகத்தில் தற்போதுள்ள வெப்பநிலையைவிட 2-3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது,

தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பநிலையை விட 2- 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும். ஈரப்பதம் குறைந்து வறண்ட சூழ்நிலை நிலவுவதால் இந்த வெப்பநிலை அதிகரிக்கும்.

கடலோர மாவட்டங்களில் காற்றின் திசையைப் பொறுத்து வெப்பநிலை மாறுபடும்.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலை அதிகரித்து காணப்படும். சென்னையில் 10 நாட்களுக்கு 2-6 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்´´ என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்தே வெப்பம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கடும் கோடை காலம் நாளை தொடங்கி வரும் 28ம் திகதி வரை நீடிக்கும் என்றார்.

Related posts: